இந்திய மொழிகள் உற்சவம்
இந்திய மொழிகள் உற்சவம் விழாவின் பொருட்டு உள்ளூர் பகுதி எழுத்தாளர்களைச் சிறப்பு விருந்தினராக அழைத்து மாணவர்களுடன் உரையாட தமிழ்நாடு
அரசு கேட்டுக்கொண்டது. இதன் பொருட்டு அரியாணிப்பட்டி ஊ.ஒ.ந.நி.பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் தமது பள்ளிக்கு வருகைதந்து மாணவர்களுடன் உரையாட கேட்டுக்கொண்டார். அவரது அன்பின் அழைப்பிற்கு எனது பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் இசைவு தெரிவித்தார்.டிசம்பர் 1, அன்று அரியாணிப்பட்டி பள்ளி சென்று அரை மணிநேரம் பாரதி படைப்புகள் குறித்தும் படைப்பிலக்கிய மனநிலை குறித்தும் உரையாற்றினேன். கல்லூரி மாணவர்கள் அளவிற்கு பள்ளி மாணவர்கள் அமைதியாக இருந்து உரையைக் கேட்டு ரசித்தார்கள். நிறைவாக தலைமை ஆசிரியர் அவர்கள் கதராடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். நான் எழுதிய நூல்களில் இரண்டினைப் பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினேன். கல்லூரிகளில் நடைபெறும் இலக்கிய விழாவைப் போல நேர்த்தியான திட்டமிடல், ஒழுங்கு, முறைமை, வரவேற்புரை- சிறப்புரை - நன்றியுரை வரிசையில் விழா சிறப்புடன் நடந்து முடிந்தது.
பிறகு நான் பணியாற்றும் முதுகுளம் ஊ.ஒ.ந.நி பள்ளி மாணவர்களிடம் மகாகவி பாரதி எழுதிய கதைகள் குறித்து உரையாடினேன். இரு பள்ளி தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர் பெருமக்களும் அன்றைய தின விழாவை அர்த்தம் பொதிந்த நாளாக்கினார்கள். வணக்கங்கள் ! நன்றிகள் !



.jpg)

கருத்துகள்
கருத்துரையிடுக