இடுகைகள்

ஏப்ரல், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வேலிகள் காப்பதில்லை - நூலுக்கான அணிந்துரை

படம்
  ச ொல்லுளி கவிஞர் வால் பிடித்து வாழத் தெரியாத, கால் பிடித்தும் வாழத் தெரியாத திரு. ம. விஜயன் அவர்களை மேடையில் இரு கைகளையும் நீட்டி சிம்மக்குரலில் முழங்கும் போராட்ட கனலராக பார்த்திருப்பீர்கள்.  அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட கொள்கை அரசியலும் அரசியல்களமும் இவரை அப்படியாக சுவீகரித்துக்கொண்டது.  இவரை நான் ஒரு நாளும் இந்தளவில் மட்டுமே  பார்த்ததில்லை.  விஜயன் ஒரு கவிஞன். எப்பொழுதும் கவிதைமனம்  கொண்டிருப்பவர். இதை இவரிடம்  நெருங்கி பழகியவர்களால் மட்டுமே அவதானிக்க முடியும். இவர் பள்ளத்தான்மனை எனும்  கவித்துவ ஊரில் பிறந்தவர். மேடுகளைக் கரைத்து பள்ளத்தை நிரப்பி வாழும் பரப்பை சமப்படுத்துபவர்கள் வாழும் மனையே பள்ளத்தான்மனை.  ஊரின் இயல்புகேற்ப இவரது பேச்சு, மூச்சு, மொழியில்  சமத்துவம் வேர்க்கொண்டிருப்பதுடன்  கவிமனம் சாரல் கொண்டிக்கிறது. புதுக்கோட்டை இன்றைக்கும் கவிக்கோட்டைதான்.  அந்தளவிற்கு எண்ணிக்கையாலும்  செறிவாலும் கவிப்பரப்பு கொண்ட நிலம். தற்கால புதுக்கோட்டை படைப்பாளர்களில் முதலில் நூல் வெளியிட்டவர்கள் யாரெல்லாமென்று புள்ளி விபரமெடு...

அம்பேத்கர் ஆக்கங்கள்

படம்
  அனைவருக்கும் வணக்கம், "அரசியலமைப்புச்  சட்டம் எவ்வளவு நல்லதாக இருந்தாலும் , அதைச் செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால், அது மோசமானதாகவே இருக்கும். அரசியலமைப்பு  எவ்வளவு  மோசமாக  இருந்தாலும் , அதைச் செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இருந்தால், அது  நல்லதாகவே இருக்கும் ." சமீபத்தில் இந்திய உச்சநீதி மன்றம் வழங்கிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்ட அண்ணல் அம்பேத்கரின் இந்த மேற்கொள் வரியைக் குறிப்பிட்டு,  அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  இணைந்து அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு பத்து தொகுதிகள் நூல் அறிமுகப்படுத்தும் விழாவை முன்னெடுத்துள்ளது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் , தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையுடன் இணைந்து அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பேச்சு, எழுத்து, ஆய்வு அனைத்து படைப்புகளையும் அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் எனும் தலைப்பில் நூறு தொகுதிகள் கொண்டுவருகிறது. நூறு என்கிற எண்ணிக்கை நம் எல்லாருக்கும் வியப்பையும் மலைப்பையும் அளிக்கிற...