இடுகைகள்

ஜூலை, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிறுகதை பயிலரங்கு - உரை

படம்
மாணவ மணிகள் அனைவருக்கும் வணக்கம். வெள்ளி விழா கண்டிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியும் வைர விழா கண்டிருக்கும் தொன்மைமிக்க தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் இணைந்து நடத்துகிற இரண்டு நாள் சிறுகதை பயிலரங்கில் இரண்டாவது நாளாகிய மூன்றாவது அமர்வில்  மாணவர்களாகிய உங்களை நான் மணிகளே என்று அழைப்பதற்கு இரண்டு  காரணங்கள் உள்ளன. ஒன்று எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு 'சிறுகதை பின்னணி - இடமும் காலமும்'. காலம் என்பது மணிகளால் ஆனது. மற்றொன்று சிறுகதை கால அளவோடு தொடர்பு கொண்டது. சிறுகதைக்கு எத்தனையோ பேர் இலக்கணம் வகுத்திருக்கிறார்கள். அதிலொரு இலக்கணம், "சிறுகதை என்பது சில மணி நேரத்திற்குள்ளாக வாசிக்கும்படியாக இருக்க வேண்டும்" என்பது. சிறுகதை என்ன செய்யும், நாம் ஏன் சிறுகதை வாசிக்க வேண்டும், எழுதவேண்டும்? நான் எனது மேல் அலுவலருக்கு வணக்கம் வைப்பேன். பதிலுக்கு அவர் ம் என்பார். அந்த ம் என்னைக் காயப்படுத்தியது.  நான் 'ம்' எனும் தலைப்பில் ஒரு சிறுகதை எழுதி அவரிடம் வாசிக்கக் கொடுத்தேன். மறுநாள் எனது வணக்கத்திற்கு பதில் வணக்கம் வைத்தார்.  நமக்குள் நிகழு...