இடுகைகள்

டிசம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உறையிடப்பட்ட இதயமாக இந்த பரிசைப் பெறுகிறேன்

படம்
  அனைவருக்கும் வணக்கம் இராம.செ. சுப்பையா நினைவாக நடத்தப்பட்ட நாவல் போட்டியில் இரண்டாம் முறையாக பரிசு பெறுகிறேன். கடந்த ஆண்டு வேங்குடிவயல் எனும் நாவலுக்காக பரிசு பெற்றேன். இந்த ஆண்டு உப்பிலிக்குடி எனும் நாவலுக்காக பெறுகிறேன். உப்பிலிக்குடி எனும்  இந்நாவலை புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் ஆற்றுப்படுகையில் உப்பு மண் எடுத்து மண் உப்பு காய்ச்சிய உப்பிலி மக்களின் வாழ்வியலை புதுக்கோட்டை நிலப்பகுதியில் பாயும்  அக்னி ஆற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதியிருக்கிறேன்.  இந்நூலை அக்னியாற்றுக்கும் அந்த ஆற்றின் பெயரால் பெயர் விளங்கும் ஆற்றங்கரைவிடுதி எனும் என்னை வளர்த்தெடுத்த கிராமத்திற்கும் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். கடந்த ஆண்டு இந்த விருதை உணர்வுப்பூர்வமாக பெற்றேன். இந்த ஆண்டு உணர்ச்சிப்பூர்வமாக பெறுகிறேன். இந்த நாவல் போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகிற இராம. செ. சுப்பையா குடும்பத்தார்களை தலை வணங்குகிறேன்.  இந்தப் போட்டியை ஒருங்கிணைக்கும் கருமாண்டி ஜங்சன் கவிஞர் அமிர்தம் சூர்யா அவர்களுக்கு அன்பு முத்தங்கள். இந்த போட்டியில் நடுவர்களாக செயல்பட்டவர்களுக்கு அன்புகள். இந்த ...