உறையிடப்பட்ட இதயமாக இந்த பரிசைப் பெறுகிறேன்
அனைவருக்கும் வணக்கம்
இராம.செ. சுப்பையா நினைவாக நடத்தப்பட்ட நாவல் போட்டியில் இரண்டாம் முறையாக பரிசு பெறுகிறேன். கடந்த ஆண்டு வேங்குடிவயல் எனும் நாவலுக்காக பரிசு பெற்றேன். இந்த ஆண்டு உப்பிலிக்குடி எனும் நாவலுக்காக பெறுகிறேன்.உப்பிலிக்குடி எனும் இந்நாவலை புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் ஆற்றுப்படுகையில் உப்பு மண் எடுத்து மண் உப்பு காய்ச்சிய உப்பிலி மக்களின் வாழ்வியலை புதுக்கோட்டை நிலப்பகுதியில் பாயும் அக்னி ஆற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதியிருக்கிறேன்.
இந்நூலை அக்னியாற்றுக்கும் அந்த ஆற்றின் பெயரால் பெயர் விளங்கும் ஆற்றங்கரைவிடுதி எனும் என்னை வளர்த்தெடுத்த கிராமத்திற்கும் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.
கடந்த ஆண்டு இந்த விருதை உணர்வுப்பூர்வமாக பெற்றேன். இந்த ஆண்டு உணர்ச்சிப்பூர்வமாக பெறுகிறேன்.
இந்த நாவல் போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகிற இராம. செ. சுப்பையா குடும்பத்தார்களை தலை வணங்குகிறேன். இந்தப் போட்டியை ஒருங்கிணைக்கும் கருமாண்டி ஜங்சன் கவிஞர் அமிர்தம் சூர்யா அவர்களுக்கு அன்பு முத்தங்கள். இந்த போட்டியில் நடுவர்களாக செயல்பட்டவர்களுக்கு அன்புகள். இந்த நூல்களுக்கு அட்டைப்பட ஓவியம் வரைந்த தோழர் லார்க் பாஸ்கரன் அவர்களுக்கு பேரன்புகள்.
எங்கள் புதுக்கோட்டையின் பெயர்த்தியும் மருமகளுமான எழுத்தாளர் ஆர்.வெண்ணிலா அவர்களின் திருக்கரங்களால் பரிசும் பாராட்டும் பெறுவதை மிகப் பெருமையாக கருதுகிறேன்.
தமிழ் எழுத்துலகில் எத்தனையோ இலக்கிய போட்டிகள் நடைபெறுகின்றன. இவற்றில் இராம.செ.சுப்பையா நினைவாக நடத்தப்படும் இந்தப் போட்டியில் நான் பெரும் விருப்பத்துடன் கலந்துகொள்வேன். காரணம் இந்தப் போட்டியை ஆண்டுதோறும் நடத்தும் தேவா சுப்பையா கடந்த ஆண்டு சொன்னார். இந்தப் போட்டியை நான் ஏன் நடத்துகிறேன் என்றால் எனது தந்தையார் இராம.செ.சுப்பையா அவர்கள் இலக்கியத்தின்மீது பெரும் தாகம் கொண்டவர். என்னையெல்லாம் எழுத வைத்து அழகு பார்த்தவர். இப்பொழுது அவர் எங்களுடன் இல்லை. என் தந்தையார் பெயர் இந்த இலக்கிய உலகில் தொடர்ந்து உச்சரிக்கப்பட வேண்டும். காற்றுவெளியில் அந்தப் பெயர் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதாக பேசினார்.
அவரது தந்தையார் பெயர் சுப்பையா போல எனது தந்தையார் பெயரும் சுப்பையாதான். சுப்பையா மகன் தேவா நாவல் போட்டியை நடத்துகிறார் என்கிற செய்தியின் ஊடே சுப்பையா மகன் ராஜமாணிக்கம் எனும் நான் இந்தப் பரிசை பெற்றேன் என்று இந்த இலக்கிய உலகம் பேச வேண்டும் என்பதற்காக இந்தப் போட்டியில் கலந்துகொண்டேன்.
நாவல் போட்டிக்கு உரூபாய் ஒரு இலட்சம் பரிசு தொகையெல்லாம் அறிவிக்கிறார்கள். அந்தப் போட்டிக்கு இந்த உப்பிலிக்குடி நாவலை அனுப்பாமல் இருபத்து ஐந்தாயிரம் உரூபாய் பரிசு தொகை கொண்ட இந்த போட்டிக்கு நாவல் அனுப்பக் காரணம் சுப்பையா என்கிற பெயர்தான். இந்தப் போட்டியை நடத்தும் குடும்பத்தார்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
இந்தப் போட்டியில் நான் அதீத விருப்பத்துடன் கலந்துகொள்வதற்கு மேலும் ஒரு காரணம் இருக்கிறது. இந்தப் போட்டியில் தேர்வாகும் நாவல்கள் நாற்கரம் பதிப்பகத்தில் வெளிவருகிறது. நான் பல பதிப்பகத்தில் நூல்கள் வெளியிட்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்து ஒரு பதிப்பகத்தாரே நாவலை முழுமையாக வாசித்து பிழைத்திருத்தம் செய்து அழகு குறையாமல் நூலின் கட்டமைப்பில் முழு கவனம் செலுத்தி ஒரு நூலைக் கொண்டு வரும் பதிப்பகத்தாரராக நல்லு ஆர் லிங்கம் உள்ளார். அப்படியான நாற்கரம் பதிப்பகத்தில் நூல் வரவேண்டும் என்பதற்காகவே இந்தப் போட்டியில் கலந்து கொள்கிறேன்.
டிசம்பர் மாதம் பிறந்துவிட்டால் இந்த ஆண்டு யார் சாகித்ய அகாடமி விருது பெறப்போகிறார் என்கிற பேச்சு எழத் தொடங்கிவிடும். என்னிடம் பலரும் விசாரிப்பார்கள். இந்த வருடம் நான் பலரிடம் சொன்னேன். இந்த ஆண்டு யார் சாகித்ய அகாடமி விருது பெறப்போகிறார் என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் நாற்கரம் பதிப்பகம் வெளியிடும் நூலில் ஒன்று அந்த விருதைப் பெற்றுவிடும் என்றேன். இதை எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறேன் என்றால் நூல் தயாரிப்பில் ஒரு நூலை பிழை இல்லாமல் கொண்டுவரும் முயற்சியில் விருப்பத்தில் பெரும் உழைப்பைக் கொடுக்கிறார் திரு. ஆர். லிங்கம் அவர்கள்.
நான் தொடக்கத்தில் சொன்னேன் இல்லையா! கடந்த ஆண்டு இந்தப் பரிசை உணர்வுப்பூர்வமாக பெற்றேன். இந்த ஆண்டு உணர்ச்சிப் பெருக்கால் பெறுகிறேன் என்று.
ஆமாம், கடந்த ஆண்டு உயர்ந்த மனிதர் ஒருவரிடம் கைக்குலுக்கும் உணர்வோடு இப்பரிசைப் பெற்றேன். இந்த ஆண்டு உணர்ச்சிப் பூர்வமாக பெறுகிறேன். ஓர் உயர்ந்த இதயத்தை ஒரு கவரில் வைத்து கொடுக்கையில் அதை எவ்வளவு கவனமாக பெற வேண்டுமோ அவ்வளவு கவனமாக பெறுகிறேன்.
நேற்று இரவு விழா நடைபெறும் இந்தப் படைப்பு அரங்கத்திலேயே தங்கும் வாய்ப்பு கிடைத்தது. நானும் சிறுகதையாளர் வம்பன் செபா அவர்களும் தங்கியிருந்தோம். புத்தகம் சூழ்ந்த அரங்கில் அமர்ந்து வாசித்திருக்கிறேன். வசித்திருக்கிறேன். வாழ்ந்திருக்கிறேன். தூங்கியதில்லை. நேற்று அந்த வாய்ப்பு கிடைத்தது. சுற்றிலும் பல்வேறு தலைப்புகள் கொண்ட நூல்கள் அடுக்கப்பட்ட அறையில் தூங்கினேன். தூங்குவதற்கு முன்பாக சலஞ்சலம் எனும் நூலினை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நூலினை வாசித்துப் பிறகு என் மனம் கனகனத்துவிட்டது.
கிராமங்களில் ஏது என்கிற ஒரு சொல் உண்டு. எனது பாட்டி எனக்கு ஏதேனும் கொடுத்தால் ஏது என்று கேட்பேன். அதெல்லாம் ஏன் கேட்கிறாய்? சாப்பிடு என்பார். நாளை வாங்கப் போகும் பரிசு தொகை இருபத்து ஐந்தாயிரம் ஏது என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது.
இராம. செ. சுப்பையா நினைவாக அவரது மகன் தேவா சுப்பையா அவர்கள் கொடுக்கும் பரிசு என்றே இதை நான் நினைத்தேன். பல போட்டிகளுக்கான பரிசுகள் தந்தையின் நினைவாக அப்படியாகத்தான் கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்த பரிசு அப்படியானது இல்லை.
சலஞ்சலம் எனும் நூலில் தேவா சுப்பையா பகிர்ந்துகொண்ட ஒரு செய்தியை கவிஞர் அமிர்தம் சூர்யா அவருக்கே உரித்தான அழகு மொழியில் எழுதியிருக்கிறார்.
இராம.செ.சுப்பையா அவர்கள் விபத்தில் இறந்துவிடுகிறார். அவருக்கு காப்பீட்டு தொகை வருகிறது. அந்தக் காப்பிட்டு தொகையை அவர் வைத்துக்கொள்ளாமல் அப்பா பெரிதும் நேசித்த இலக்கியத்திற்கு பங்களிப்பாற்றுபவர்களுக்கு பரிசாக கொடுக்கலாமென இருக்கிறேன் என்கிற விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அவரது விருப்பப்படி சிறுகதைப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சம தொகையில் பரிசுகள் வழங்கப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற கதைகள் ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது என்பதாக அந்த நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
யாருக்கு இந்த மனது வரும்? நமது ஊர்களில் காப்பீட்டு தொகையை வாரிசுகள் அடித்துக்கொண்டு பிரித்துகொள்வதுதானே வழக்கம். ஆனால் இங்கு தேவா சுப்பையா அந்த தொகையை இலக்கியப் பரிசாக வழங்குகிறார்.
காலையில் இந்தச் செய்தியை உறுதிசெய்யும் பொருட்டு விசாரித்தேன். தேவா சுப்பையா சொன்னார். முதலாம் ஆண்டுதான் அந்தத் தொகையிலிருந்து பரிசு கொடுத்தேன். இந்த விருது நான்காம் ஆண்டு விருது. இந்தப் பரிசு தொகையை அப்பா நினைவாக எனது உழைப்பிலிருந்து கொடுக்கிறேன் என்றார்.
எவ்வளவு பெரிய பரிசு இது. இந்தப் பரிசை சாதாரணமாக வாங்க கூடாது. உறையிடப்பட்ட ஓர் உயர்ந்த இதயத்தைக் கையில் வாங்குவதைப் போல வாங்க வேண்டுமென நினைத்தேன். அப்படியாகவே பெற்றுள்ளேன்.
இந்த நேரத்தில் சீதக்காதியும் அவரை ஆதரித்த உமறுப்புலவரும் என் நினைவுக்கு வருகிறார்கள். செத்தும் கொடுத்தவர் சீதக்காதி என்பது வழக்கு. அப்படியாக இராம.செ.சுப்பையா அவர்களைப் பார்க்கிறேன். என்னை நான் உமறுப்புலவராக உருவகப்படுத்திக்கொள்கிறேன்.
இராம.செ.சுப்பையா குடும்பத்தார்கள் நீண்ட ஆயுளுடன் நல்வாழ்வு வாழ வேண்டும். தொடர்ந்து அவர்கள் இலக்கியத்திற்கு பெரும் பங்களிப்பாற்ற வேண்டும் என்று வாழ்த்தி நன்றி பாராட்டி விடை பெறுகிறேன்.
நன்றி வணக்கம்!

( 14.12.2025 அன்று சென்னை கோடம்பாக்கம் படைப்பு அரங்கத்தில் உப்பிலிக்குடி நாவல் வெளியீட்டு இராம.செ.சுப்பையா நினைவாக நடத்தப்பட்ட நாவல் போட்டியில் உரூபாய் 25,000 பரிசு பெற்று ஆற்றிய ஏற்புரை)
.jpg)

.jpg)
.jpg)

.jpg)

.jpg)

மனமார்ந்த வாழ்த்துகள்!
பதிலளிநீக்கு