பாரதி உரை - அனுபவம்
செப்டம்பர் 24, தேவக்கோட்டையில் பாரதி தமிழ்ச்சங்க தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 63 ஆம் ஆண்டு மகாகவி பாரதி விழா நடைபெற்றது. இரண்டு அமர்வுகள் கொண்ட ஒரு நாள் நிகழ்வு. முற்பகல் அமர்வுக்கு அடியேன் சிறப்புரை. மாலை அமர்வுக்கு தவத்திரு பொன்னம்பலம் அடிகளார் அவர்கள். மண்டபம் நிறைந்த அரங்கில் சிறப்புரையாற்றுவது இதுவே முதல் வரை. ' பாலகருக்குப் பாரதி' எனும் தலைப்பில் உரையாற்றினேன். இத்தலைப்பை மூன்று கூறுகளாகப் பொருள் காண முடியும். பாலர் வயதில் பாரதி. இன்றைய பாலருக்குப் பாரதி. பாலர் என்றால் விபின் சந்திரபாலரைக் குறிக்கும். 1908 ஆம் ஆண்டு சென்னை வந்த பாலர் அவர்கள் பத்து நாட்கள் தங்கி ஆறு கூட்டங்களுக்கும் மேல் உரையாற்றியுள்ளார். பாலர் உடனான பாரதி என்று பொருள் கொள்ளவும் இடமுண்டு. நான் இன்றைய பாலருக்குப் பாரதி சொல்லும் செய்தி எனும் பொருளில் உரையாற்றினேன். பாரதியின் ஞான ரதம், சின்னச் சங்கரன் கதை, பாப்பாப் பாட்டு, நந்தலாலா, அந்தரடிச்சான் ஸாகிப் ஆகிய படைப்புகளிலிருந்து பாரதி குறித்து உரையாற்றினேன். பாரதி படைத்த கதாபாத்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்த ...