இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தடுக்கை நூல் வெளியீடு பத்திரிக்கை செய்திகள்

படம்
https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2021/oct/23/prevention-short-story-collection-thread-publication-3722539.html
படம்
என் ஆசிரியரின் இதயம் பெரியது, நன்றியுடன் தலை வணங்குகிறேன்,,, தான் செய்யும் வேலைக்காக எத்தனை பரிசுகள், பாராட்டுகள் , விருதுகள் எனப் பெற்றாலும் தன் ஆசிரியரிடம் பெறும் பாராட்டும் பொன்னாடையும் மற்ற எல்லாவற்றையும் விடவும் மேலானது, என்றே உணர்கிறேன். நான் ஆசிரியர் பயிற்சி எடுத்துக்கொள்கையில், தொழிற்நுட்பத்துறை விரிவுரையாளராக இருந்து எங்களை வழிநடத்தியவர், திரு. முனைவர் பெ. நடராஜன் அவர்கள். அப்பொழுதே அவருக்கென தனித்துவமான பண்புநலன்களைக் கொண்டிருந்தார். முதலாமாண்டு ஆசிரியர் பயிற்சியின் போது, பயிற்சி மாணவர்களின் கற்பித்தல் திறனை வீடியோவாக படமெடுத்து, மாநில அளவில் முன்மாதிரியாக ஒளிபரப்பு செய்தவர். பலரும் அவரவர் வகுப்பறைக்குள் கற்பித்தல் பயிற்சியை மேற்கொள்ள , நான் வகுப்பறைக்கும் வெளியே மாணவர்களை அழைத்துவந்து பள்ளி மைதானத்தில் நாடகத்துடன் மாதிரி வகுப்பு எடுத்ததையும், அதை அவர் படம்பிடித்து, சக ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு ஒளிபரப்பி பாராட்டியதையும் இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன் . தகுதியான மாணவர்களை அடையாளம் கண்டு பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவர்தான். அவர் தற்போது மாவட்ட ஆசி...
படம்
நன்றி - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் முதல்வர்,,, இன்று , என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள். என்னை ஆசிரியராக உருவாக்கிய புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் எனது "தடுக்கை" சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. இந்நிகழ்வுக்கு நிறுவன முதல்வர் முனைவர் திரு.பெ.நடராஜன் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு சாமி.சத்தியமூர்த்தி அவர்கள் நூலை வெளியிட, நிறுவன முதல்வர் அவர்கள் நூலைப் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் எனது ஆசிரியர்களான முதுநிலை விரிவுரையாளர்கள் முனைவர் திரு. கோ.முருகன், முனைவர் திரு.ம.ராஜ்குமார், திரு.மு.மாரியப்பன் ஆகியோர் பங்கேற்றனர். நான் படித்த நிறுவனத்தில் எனது ஆசிரியர்கள் முன்னிலையில் நூல் வெளியிட்ட தருணத்தை நான் பெரும்பேறாக கருதுகிறேன். இத்தருணத்திற்காக, எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றிமொழி வெளியீடு - திண்டுக்கல்

கரம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

படம்
கரம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாகச் சேர்ந்துள்ள இளங்கலை மாணவர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி வழங்கும் நோக்கமாக, கல்வியால் எல்லாம் சாத்தியமே, என்கிற தலைப்பில் உரையாற்றினேன். பொன்னாடை அணிவித்து கௌரவிக்கிறார், முதல்வர் திரு. மா.கோவிந்தராசு அவர்கள்