சமகால புனைவுகளின் பொருள்வெளி
அனைவருக்கும் வணக்கம், உண்ட மயக்கம் தொண்டனுக்கு மட்டுமல்ல, தோழர்களுக்கும் உண்டு என்பதை நான் அறிவேன். மதிய உணவுக்குப் பிறகு இந்த கூடுகை கூடுகிறது. மதிய உணவுக்குப் பிறகு எல்லாரையும் தூங்க வைக்க வேண்டும் என்பதற்காக சகோதரிகளைப் பாட வைத்தார்கள். அந்தப் பாடலில் தூங்காதவர்களைத் தூங்க வைக்க எழுத்தாளர் மீரான் மைதீன் கதைகள் சொன்னார். இப்பொழுது இந்த அரங்கம் ஆழ்ந்த தூக்கத்திலிருக்கிறது. இந்த தூக்கத்தை எழுப்பும் முகமாக நான் நின்றுகொண்டிருக்கிறேன். கதைக்கும் சிறுகதைக்குமான வித்தியாசம் இதுதான். கதை தூங்கவைப்பதற்காக சொல்லப்படுவது. சிறுகதை தூங்கியவர்களை எழுப்புவதற்காக சொல்லப்படுவது. இந்த நிகழ்வில் முன்னதாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் குமரி மாவட்டக் குழு கலை இலக்கிய பண்பாட்டு முகாமிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் நடைபெறும் இந்த முகாமில் சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு உரையாற்றும் வாய்ப்பு பெற்றுள்ளேன். இதற்கும் முன்பு மறைந்த கவிஞர் எச்.ஜி.ரசூல் அவர்கள் இந்த முகாமில் பேசும் வாய்ப்பைக் கொடுத்தார். அப்பொழுது 'கண்டுக்கொள்ளப்படாத கதையாளர்கள...