இடுகைகள்

ஏப்ரல், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உறுதி கொண்ட நெஞ்சினாய் வா

படம்
  17.03.2024 ஞாயிறு அன்று எனது ஆசிரியர்/ ஒய்வு பெற்ற விரிவுரையாளர்  திரு. பாலையா அவர்கள் " உறுதி கொண்ட நெஞ்சினாய் வா! வா! " எனும் தலைப்பில் எழுதி கொணர்ந்த  கட்டுரை நூலைத் தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்கள் வெளியிட்டு சிறப்பித்தார். புதுக்கோட்டை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டதன் பிறகு நடைபெற்ற முதல் இலக்கிய நிகழ்வு இது. இந்நிகழ்வில் எழுத்தாளர்/ ஆசிரியர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து அவராற்றிய கல்விப் பணிகளை நினைவுகூர்ந்தேன்,,, இந்த நிகழ்வை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் புதுகோட்டை மாநகரக் கிளை நடத்தியது. கிளைக்கும் நூலாசிரியருக்கும் வாழ்த்துகள்,,, https://youtu.be/MO4zy0Ebqf4 si=YV0UmI0jisA6vKky

புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கமும் படைப்புலகமும்

படம்
மார்ச் 31, ஞாயிறு அன்று சங்கீதா ஓட்டலில் புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கம்  நான்காம் நிகழ்வு நடைபெற்றது. ஒரு படைப்பாளனின் ஆகப்பெரும் கனவு என்பது அவரது படைப்புகளைக் கொண்டு பேசப்படும் படைப்புலகம்தான். பல எழுத்தாளர்களுக்கு இப்படியான நிகழ்வு நடந்தேறாமல் போயிருக்கிறது. அதிலும் உள்ளூரில் மண்ணின் மைந்தர்களால் படைப்புலகம் கொண்டாடப்படுவது அரிது, பெரிது. எழுத்தாளர் திரு. ரா.ராஜநாராயணன் அவர்கள் புதுக்கோட்டை தாஞ்சூர் பகுதியைச் சார்ந்தவர். அரசுப் பள்ளி ஆசிரியர். எண்ணமும் ஏற்றமும், இவர்கள் வேறு யாருமல்லர்,  வைகைப் புயல் வடிவேலு, சின்னக் கலைவாணர் விவேக், கீழடிப் புதையல் எனும் ஐந்து நூல்கள் எழுதியுள்ளார். நான் கீழடிப் புதையல் எனும் நூலை அறிமுகம் செய்து பேசினேன். 11  ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்காக எழுதிய கட்டுரை என்பதால் நூல் அந்த வரையறையோடு 19 தலைப்புகளைக் கொண்டிருந்தது. இந்த நூலை வாசிக்கையில் எனது தேடல் இது தொடர்பான பல நூல்களை நோக்கி  அழைத்துச் சென்றது. எல்லீஸ் எழுதிய A GRAMMAR OF THE TELOOGOO LANGUAGE (தெலுங்கு இலக்கணம்), கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், ஜான...