இடுகைகள்

பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மேனாள் நேர்மையான அதிகாரி மீது எழுத்தாளர் காட்டிய அன்பு

படம்
ஐந்து வருடங்களுக்கு முன்பு கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலராகப் பணியாற்றியவர் திரு. அ.குமரன் அவர்கள். தற்போது அவர் அன்னவாசல் ஒன்றியம் கீழப்பளுவஞ்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.  பள்ளி வயதுக் குழந்தைகளிடம் படைப்பாற்றல் திறனை வளர்க்கவும் மொழி மீதான ஆர்வத்தை பெருக்கவும் பள்ளிகள் தோறும் தமிழ்க்கூடல் நிகழ்வு நடத்தி உள்ளூர் எழுத்தாளரை அழைத்து மாணவர்களின் முன்பு பேச வைக்க   தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதன்பொருட்டு திரு. குமரன் அவர்கள் தன் பள்ளியின் தமிழ்க்கூடல் நிகழ்வுக்கு புதுக்கோட்டை மாவட்ட  எழுத்தாளர்கள் அண்டனூர் சுரா,  மகா.சுந்தர், நேசன்மகதி மற்றும் காசிநாதன் ஆகியோரைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்.  திரு. குமரன் அவர்கள் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் கல்வி அதிகாரி பணியாற்றும்பொழுது  நேர்மையாகவும் மாணவர் மற்றும் ஆசிரியர் நலனில் பெரும் அக்கறை கொண்டு அவர்களின் தேவையை உடனுக்குடன் செய்து கொடுத்து அப்பழுக்கற்ற அதிகாரியாக திகழ்ந்தவர் என்பதால் அவரது பணிக் கலாச்சாரத்தை கவுரவிக்கும் பொருட்டு தான் எ...