சக தோழனாக - கவிஞர் நா. முத்துநிலவன்
அனைவருக்கும் வணக்கம், கவிஞர் நா. முத்துநிலவனின் சக தோழனாக உங்கள் முன் நின்றுகொண்டிருக்கிறேன். இலக்கியம் என்பதே வாழ்வின் பிரதிபலிப்புதான். அதை நினைவூட்டுகிறது கவிஞர் நா. முத்துநிலவனின் படைப்புலகம். இந்த நிகழ்வின் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தியின் மொழியிலிருந்து சொல்வதாக இருந்தால் எங்களின் முன்னத்து ஏர், முத்தமிழின் தேர், முளைக்கின்ற வித்துகளில் தெளிக்கின்ற நீர் - கவிஞர் நா. முத்துநிலவன் அவர்களின் படைப்புலகம் அவரது எழுபதாவது அகவையைக் கொண்டாடும் பிளாட்டினம் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. கவிஞர் முத்துநிலவன் அவர்கள் வயதை அடிப்படையாகக் கொண்ட விழாவை விரும்பாதவர். காரணம் அவர் மார்க்சிய சிந்தனை கொண்டவர். மார்க்சிய பார்வையில் வயது என்பது சமூக பொருளாதார நிலை. பிறகு ஏன் இங்கு நான் எழுபதைக் குறிக்கும் பிளாட்டினம் விழா என்று குறிப்பிடுகிறேன் என்றால் இன்றைய விழா அழைப்பிதழிலுள்ள பெயர்களை வாசித்துவிட்டு சும்மாதானே இருக்கிறேன் என்று பெயர்களை எண்ணிப் பார்த்தேன். அழைப்பிதழில் எழுபது பெயர்கள் இருந்தன. எழுபது பேர்கள் சேர்ந்து ஒருவரைக் கொண்டாடும் ஒரு விழாவுக்கு என்ன ...