நன்றி கரிசல் இலக்கிய விழா
கரிசல் மண்ணையும் கரிசல் இலக்கியத்தையும் தொடர்ந்து நான் என் நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்து வருகிறேன். இதுவரை உத்தேசமாக 120 கதைகள் எழுதியிருக்கிறேன். சுமாரான, பரவாயில்லை எனும் படியான, புதிய வடிவிலான, பரிசோதனை முயற்சியிலான, தமிழகம் அளவிலும் உலகளாவிய அளவிலும் போட்டிகளில் பரிசு பெற்ற கதைகள்,.. இதற்குள் அடங்கும். நண்பரே, படைப்புக்கு எண்ணிக்கை முக்கியமல்ல, படைப்பின் தரம்தான் முக்கியம். மௌனி எவ்வளவு கதைகள் எழுதினார்? சொற்பம்தான்! பேசப்படுகிறார் அல்லவா! கரிச்சான்குஞ்சு படைத்தது ஒன்றே ஒன்றுதான், பசித்த மானுடம். காலம் கடந்து நிற்கிறதே! ப. சிங்காரம் புயலிலே ஒரு தோனி, புயலுக்கு அப்பால் எனும் இரண்டு நாவல்களே எழுதினார். இன்றைக்கு வரைக்கும் பேசப்படுகிறதே,..அப்படி. இந்த விமர்சனத்தை நான் மறுத்ததில்லை! ஒரு நண்பர் நீண்ட ஆண்டுகளுக்கு முன்பு முகநூலில் எழுதினார். பன்றி குட்டிப் போடுவதைப் போல சிலர் நூல்கள் போடுகிறார்கள். சிங்கம் குட்டி போடுவதைப் போல ஒன்று போட்டாலும் தரமான ஒரு குட்டியாகப் போட வேண்டும், என்று. இந்த விமர்சனம் எனக்காக எழுதியது அல்ல. இந்த விமர்சனத்தோடும் என் படைப்புகளை பொருத்தி பார்த்...