திமுகவும் எனது முதல் நூலும்!!
திமுக இளைஞரணி சார்பில் கந்தர்வகோட்டையில் ஒரு நூலகம் திறக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 16 அன்று திறக்கப்பட்ட இந்நூலகம் இன்றுதான் (22.05. 2024) எனக்குத் தெரியவந்தது. சின்ன நூலகம், ஆபூர்வ நூல்கள். பேரறிஞர் அண்ணா, கலைஞர், பெரியார், அண்ணல் அம்பேத்கர் மொத்த தொகுப்பு நூல்கள் கொண்ட நூலகம். நான் எழுதிய இரண்டு நூல்கள்கூட அதில் இடம்பெற்றிருந்தன. சொல்லேர், தடக்கை. எனது எழுத்துப் பயணத் தொடர்ச்சியில் திமுகவுக்கு சிறுபங்கு இருக்கிறது. இது நடந்தது ஏப்ரல் 1, 2014. முட்டாள் தினத்தை முன்னிட்டு தினமணி இதழில் ' முட்டாள்களின் கீழ் உலகம் ' என்றொரு கட்டுரை எழுதினேன். அக்கட்டுரை இதழில் ஒரு பக்கம் முழுமையும் பிரசுரமாகியிருந்தது. கட்டுரையின் கீழே கந்தர்வகோட்டை முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. தஞ்சாவூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எஸ்.எஸ். பழனிமாணிக்கம் அவர்கள் டெல்லியில் இருந்தபடி இக்கட்டுரையை வாசித்து யாரிடமோ எனது அலைபேசி எண்ணைக் கேட்டுவாங்கி என்னைத் தொடர்புகொண்டார். டெல்லியிலிருந்து பேசுவதாகச் சொல்லி கட்டுரைக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். நானும் கந்தர்வகோட்டைதான் என்றார். நான்...