இலக்கிய உரை - எழுத்தாளருக்கு மூன்று படித்துறைகள்
@ அண்டனூர் சுரா அனைவருக்கும் வணக்கம். ஓர் அறிமுக எழுத்தாளனின் முதல் நூல் இப்படித்தான் இருக்கும் என்கிற கருத்து தமிழ் இலக்கியச் சூழலில் இருக்கிறது. முதல் நூல் வெளியீட்டு விழா இப்படியெல்லாம் நடக்கும் என்கிற புரிதல் இருக்கிறது. முதல் நூலுக்கான திறனாய்வு கூட்டம் இந்த அளவில்தான் நடக்குமென்று ஒரு கருதுகோள் இருக்கிறது. இவ்வளவையும் தகர்த்து இந்த நூல் வெளியீட்டு விழா ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்குரிய விழாவாக நடந்துகொண்டிருக்கிறது. சராசரியாக இலக்கியக் கூட்டத்திற்கு கூடும் கூட்டத்தை விடவும் திரளான கூட்டம் இது. இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு ‘சிலுக்கு தேவதை’ எனும் நூலின் பெய ரும் ஒரு காரணம் என்று கருதுகிறேன். அன்பு நண்பர் கவிஞர் அஷ்ரப் அலி அவர்கள் ஒரு மாதத்திற்கும் முன்பு என்னிடம் தொடர்புகொண்டு நிலா மகன் சிறுகதைத் தொகுப்பு கொணர்ந்திருக்கிறார். நீங்கள் வந்து வெளியிட்டு சிறப்புரையாற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார். நான் மட்டுமல்ல, யாரும் அஷரப் அலியின் வேண்டலைத் தட்ட முடியாது. சிலுக் கண்களிலிருக்கும் ஒரு விதமான காந்தமும் சிலுக் நடனத்தின் நளினமும் அஷரப் அலியின் குரலில...