இடுகைகள்

மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முத்தமிழின் விழுமியங்கள்

படம்
அனைவருக்கும் வணக்கம், கரம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சிறப்பு என்பது அதன் அமைவிடம்தான். இந்தக் கல்லூரி கரம்பக்குடியின் பெயரைத் தாங்கியிருந்தாலும் மருதன்கோன்விடுதி எனும் ஊரில் அமையப்பெற்றுள்ளது. ஊர்ப்பெயர்களில் மரூஉக்கு உட்படாத ஊர் மருதன்கோன்விடுதி. இந்த ஊருக்கும் அருகிலுள்ள ஊர் மைலன்கோன்பட்டி,  மேலங்கபட்டி என்று மக்களால் அழைக்கப்படுகிறது. இந்த ஊரின் உண்மையான பெயர்  மகிழ்நன்கோன்பட்டி. அதற்கும் அடுத்து அம்புக்கோவில் உள்ளது. அகநானூறு, மதுரைகாஞ்சி, புறநானூறு, சிலப்பதிகாரத்தில் அழும்பில் என்று  பாடப்பட்ட ஊர்தான் அழும்பில்கோவில் என்றாகி தற்போது அம்புக்கோவில் என்றுமருவியுள்ளது. இன்னொரு புறம்  கொத்தகப்பட்டி என்றார் ஊர் உள்ளது. இந்த ஊரிலிருந்துகூட நிறைய மாணவர்கள் படிக்கிறீர்கள்.  அந்த ஊர் நீண்ட ஏரிக்கரையில் அமைந்துள்ளது. ஏரியின் கரைக்கு கோட்டகம் என்று பெயர். சிலப்பதிகாரத்தில் இச்சொல் உள்ளது. கோட்டகம்பட்டி என்பதுதான் இன்று கொத்தகப்பட்டி என்று திரிந்துள்ளது.  இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க ஊரிலிருந்து மாணவர்கள் படிப்பதால் இக்கல்லூரி வரலாற்று சிற...

அறிவுடைமை

படம்
  அனைவருக்கும் வணக்கம், தேமா,  புளிமா என்பவை யாப்பு இலக்கணம் அலகிட்டு வாய்ப்பாடுகள்.  இதேபோன்று ஒய்மா என்றொரு சொல் தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது. ஒய்மா  என்பது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடை ஊர். இந்த இலக்கியம் 'ஒய்மா நாட்டு நல்லியக்கோடன்' என்கிற வள்ளலைப் பாடுகிறது. பாடியவர்  'நத்தத்தனார்' எனும் புலவர்.  ஒய்மா நாடு என்பது இன்றைய  திண்டிவனம் பகுதி.  நல்லியக்கோடன் எனும் வள்ளல் ஓவியர் குடி மரபில் வந்தவன். இம்மன்னனை புலவர் நல்லியக்கோடன் ஓரிடத்தில் இவ்வாறு காட்சிப்படுத்துகிறார்.  "சிரித்த முகத்துடன் திகழும் தனது சுற்றத்தினருடன் அரசன் நல்லியக்கோடன் அரசவையில் வீற்றிருக்கிறான். அந்தக் காட்சி எப்படியாக இருக்கிறதென்றால் பல விண்மீன்களுக்கு நடுவில் ஒளிமிக்க திங்கள் திகழ்வதைப் போன்றிருக்கிறது". என்னவோர் உவமை! இந்த உவமைக்கு நேர்மாறாக மாணவர்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள். திங்கள் முகம் கொண்ட தலைமைஆசிரியரைச் சுற்றிலும் ஒளிமிக்க, பிரகாசமான நட்சத்திரங்களாகச் சூழ்ந்திருக்கிறீர்கள். உங்கள் கண்களில் ஒளிரும் இந்த ஒளியும் முகத்தில்...

பள்ளத்தான்மனை பெயர்க்காரணம்

படம்
  அனைவருக்கும் வணக்கம், பள்ளத்தான்மனை அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியின் பொன் விழா ஆண்டில் சிறப்பு அழைப்பாளராக என்னை அழைத்தமைக்காக பெருமை கொள்கிறேன்.  பள்ளத்தான்மனை ஊர் பள்ளி ஆண்டுவிழாவில் எதைப் பற்றி பேசுவது என்று யோசித்தபொழுது ஊர்ப் பெயர்க்காரணம் குறித்து பேசலாமென்று  அதற்கான ஆய்வில் இறங்கினேன். எனது இந்த ஆய்வு தவறாகக்கூட இருக்கலாம். ஆயினும் உங்கள் ஊர்ப்பற்றிய ஆய்வை இந்த மேடையில் தொடங்கி வைக்கிறேன். பள்ளத்தான் என்பது என்னவென்று ஆராய்கையில் ஆனைவிழுந்தான், பன்றியான் ஊர்ப் பெயர்கள் என் ஆய்வுக்கு வந்தன. ஆனைவிழுந்தான் பள்ளம் என்று அழைக்கப்படும் இவ்வூர் கந்தர்வகோட்டைக்கும் அருகில் உள்ளது. ஆனைவிழுந்தான் என்பது என்னவென்றால் யானைகளின் மூர்க்கத்தை அடக்கி மனிதப் பயன்பாட்டிற்கு கொண்டுவருகிறவர்கள் ஆனைவிழுந்தான் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் பள்ளமான இடத்தில் குடிவைக்கப்பட்டார்கள்.  ஆகவே அது ஆனைவிழுந்தான் பள்ளம் என்று அழைக்கப்பட்டது. பன்றியான் பள்ளம் என்றோர் இடம் புதுக்கோட்டைக்கும் அருகில் உள்ளது. விவசாயத்தைச் சீரழிக்கும் காட்டுப்பன்றிகளை பிடித்து அடக்கி விவசாயத்தை காப்...

நினைவஞ்சலி- நந்தலாலா

படம்
  அனைவருக்கும் வணக்கம், கவிஞர் நந்தலாலா அவர்களின் மரணம்  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்திற்கு மட்டுமான இழப்பு அல்ல. முற்போக்கான கலை இலக்கிய அமைப்பு, அது சார்ந்த சமூகத்திற்கான  பேரிழப்பு.  நந்தலாலா என்கிற சொல்லை உச்சரிக்கும் பொழுதெல்லாம்  எனக்கு பெரியார் நினைவுக்கு வருவார். 'பெரியார்' என்கிற அடைவுப் பெயர் மாதர் சங்கம் பேரியக்கமாக கூடி சூட்டியப்பெயர். இச்சொல் எந்த இலக்கியத்திலிருந்து எடுத்தாளப்பட்டது? பெரியார் என்கிற சொல்லைத் தந்த பெருமை திருக்குறளையும் நாலடியாரையும் சாரும். ' தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்' ஓர் இலக்கியச் சொல் ஒருவரின் அடையாளப் பெயராகவும் சிறப்புப் பெயராகவும் அமைந்தது ஈ.வெ.ரா அவர்களுக்குத்தான்.  இவருக்குப் பிறகு யார் பெயரெல்லாம்  இலக்கியச் சொல்லாகியிருக்கிறது என்று தேடுகையில்,,,, நம் முன்னே நந்தலாலா வருகிறார்.  'காக்கைச் சிறகினிலே நந்தலாலா' இச்சொல்லின் உள்ளார்ந்த பொருள் என்னவென்று தேடுகையில் கண்ணனைக் குறிக்கும் சொல்லே நந்தலாலா என்றும் நந்தகோபாலனே நந்தலாலா என்றும் சிலர் உரை எழுதியிருக்கிறார்கள். எம்மால் அதை...

எட்டையபுரம் தொன் போஸ்கோ கல்லூரி நாவல் உரை

படம்
  இன்று எட்டையபுரம் கீழ ஈரால் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் ,  தொன் போஸ்கோ கலை மற்றும்  அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய மாநில அளவிலான இலக்கிய கருத்தரங்கில்  'தற்கால நாவல் இலக்கியம்' எனும் தலைப்பில் உரையாற்றினேன்.  உரையில் தூத்துக்குடி, திருநெல்வேலி நகரங்களை மையமாக வைத்து நான் எழுதிய தீவாந்தரம் எனும் நாவல், அந்த நாவலில முக்கிய பாத்திரமாக இடம்பெற்ற தூத்துக்குடி கசப்புக் கவி ஆண்டான் கவிராயர் குறித்து பகிர்ந்துகொண்டேன்.  இவர் சாபக்கவி பாடுவதில் தேர்ந்தவர். தொடக்கக் கால நாவல்களில் பத்மாவதி சரித்திரம் குறித்தும் நாவலின் முதன்மை பாத்திரமான பத்மாவதி  குறித்தும் பகிர்ந்துகொண்டு தற்கால நாவலுக்குள் நுழைந்தேன்.  தற்கால நாவல்களில் தூத்துக்குடி மற்றும் நெய்தல் நிலத்தைக் கதைக்களமாகக் கொண்டதில்  குறிப்பிட்ட சில  நாவல்களைப் பகிர்ந்துகொண்டேன். அவற்றில்  கண்ணகுமார விஸ்வரூபன் எழுதிய தேரியாயணம்,  இராஜம் கிருஷ்ணன் எழுதிய கருப்பு மணிகள், இல. வின்செண்ட் எழுதிய அக்காணி,  எம்.எம்.தீன் எழுதிய காதல் அசுரன் க்ளைவ், கி.ரா எழுதிய கோபல்ல கிராமம், சு....

மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி உரை

படம்
  மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் இடம்பெற்றுள்ள மாட்சிமை என்கிற பதம் எந்த இலக்கியத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது? உலக தாய்மொழிகள் தினத்தின் வரலாறு என்ன? உலகில் எந்தெந்த மொழிகள் எந்தெந்த மொழிகளால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றன? உலகில் தொன்மை மொழி, செம்மொழி என்று மொழிகள் இருக்கின்றன. உயர்ந்த மொழியென்றும் சிறந்த மொழியென்றும் ஒரு மொழி இருக்கிறதா? புதுக்கோட்டை மொழிக்கு ஆற்றிய பங்களிப்புகள் என்ன? தமிழிலக்கியங்கள் எவையெல்லாம் புதுக்கோட்டை நிலப் பகுதியைப் பாடியுள்ளன? புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிய குறிப்பிடத்தகுந்த  தமிழ்ப் பேராசியர்கள் யாரெல்லாம், அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்புகள் என்ன? தமிழ்த்துறை- தமிழாய்வுத்துறை இரண்டில் எதிர்கால தேவை எது? இத்தகைய கேள்விகளை உள்ளடக்கி 'என்றும் வாழும் தமிழ்' எனும் தலைப்பில் புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் ஒரு மணி நேரம்  உரையாற்றினேன். தலைவர் கல்லூரி முதல்வர் அம்மா திருமதி பேரா. புவனேஸ்வரி அவர்கள் நோக்கவுரை தமிழாய்வுத் துறை தலைவர் திரு. பேரா. சி.சேதுராமன் அவர்கள் நெறியாளிகை திரு. பேரா. ஸ்ரீதர் அ...

வேங்குடிவயல் - ஏற்புரை

படம்
 எனது ஏற்புரை-இராம. செ. சுப்பையா நினைவு நாவல் போட்டி பரிசளிப்பு விழா இராம. செ. சுப்பையா நினைவு அறக்கட்டளை நடத்திய நாவல் போட்டியில் முதல் மூன்றிடம் பெற்ற நாவல்களுக்கான பரிசளிப்பு விழா கோடம்பாக்கத்தில் நடைபெற்றது.  படைப்பு குழுமம் அரங்கில் நடைபெற்ற விழாவில் நாவல் போட்டியின் நடுவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டார்கள். அவர்கள் தமது உரைகளில் போட்டிக்கு வந்த நாவல்களின் கதை, எழுத்து மொழி, தற்போதைய நாவலின் போக்கு ஆகியவற்றைக் கோடிட்டு பேசினார்கள். பரிசு மற்றும் கேடயம் வழங்கிய பிறகு எழுத்தாளர்கள் ஏற்புரையில் எழுத்து அனுபவம் குறித்து பேச கேட்டுக்கொண்டார்கள். எனது ஏற்புரையை இவ்வாறு அமைத்துக்கொண்டேன். இராம. செ. சுப்பையாவின் பெயர் திரும்பத் திரும்ப இந்த பூமியில் உச்சரிக்கப்பட வேண்டும் என்பதற்காக சுப்பையாவின் மகன் தேவாசுப்பையா இந்த நாவல் போட்டியை நடத்துவதைப்போல புதுக்கோட்டை மாவட்டத்தில் குக்கிராமமான அண்டனூர் என்கிற எனது கிராமம்  இலக்கியப் பரப்பில் திரும்பத் திரும்ப உச்சரிக்கப்பட வேண்டும் என்பதற்காக  அண்டனூர் சுரா எனும்  பெயரில் கதைகள் எழுதித் கொண்டிருக்கிறேன்....