உம்பரான் சிறுகதை நூல் வெளியீட்டு உரை
அனைவருக்கும் வணக்கம் , 'எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ' தமிழ்த்தாயை முன்னதாகவே வணங்கிவிடுகிறேன். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் புதுக்கோட்டை மாவட்டக் கிளையின் சார்பில் நடைபெறும் புதுக்கோட்டை மண்ணிலிருந்து ஒரு புத்தம் புதிய இலக்கிய பயிர் சகோதரி பாண்டிச்செல்வம் எழுதி தையல் பதிப்பகத்தின் வழியே வெளிவந்திருக்கும் உம்பரான் எனும் சிறுகதை நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் உங்களையும் அழைத்து வந்திருக்கும் இதயங்களையும் வணங்குகிறேன். புதுக்கோட்டை இலக்கிய கோட்டையாக திகழ்ந்து வருகிறது. இந்தக் கோட்டைக்குள் கவிதைப் பயிர்கள் அதிகம். சிறுகதை செடிகள் குறைவு. அதிலும் பெண் சிறுகதையாளர்கள் போதுமான அளவிற்கு இல்லை என்கிற அளவிலேயே புதுக்கோட்டை இருந்து வந்துள்ளது. இந்த குறையை போக்கும் விதமாக வந்திருக்கிறார் எழுத்தாளர் பாண்டிச்செல்வம் அவர்கள். பாண்டிச்செல்வம் அவர்கள் தைரியமிக்க பெண். பிரச்சனைகளின் சிக்கல்களை எளிதில் அவிழ்ப்பவர். மனிதர்களை மென்மையாக கையாள்கிறவர். இப்படியான அம்சங்கள் இருக்கிற ஒருவரால்தான் சிறுகதை எழுத முடியும்....