இடுகைகள்

டிசம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காரைக்கால் இலக்கிய சந்திப்பும் புது அனுபவமும்

படம்
  காரைக்கால் இலக்கிய சந்திப்பும் புது அனுபவமும் சிங்கப்பூர் எழுத்தாளர் சிங்கை அழகிரிசாமி சக்திவேல் அவர்கள் காரைக்கால் கடற்கரையில் கலங்கரை விளக்கத்தையொட்டிய அசோக் ரெஸ்டாரெண்ட் அரங்கில் காரைக்கால் இலக்கிய சந்திப்பு எனும் பெயரில் ஒரு நிகழ்வைக் கூட்டியிருந்தார். இரண்டு நாள். நிகழ்வு. முதல் நாளில் எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா,  நான், வெற்றிமொழி பதிப்பகத்தார் திண்டுக்கல் தாஸ் மூவரும் படைப்பிலக்கியம் சார்ந்தும் தோழர் செல்லச்சாமி அவர்கள் கட்சி அரசியலின் போக்கு குறித்து பேசும் அமர்வாக இருந்தது. நான் 'இலக்கியத்தில் வட்டார மொழி மாந்தர்கள்' எனும் தலைப்பில் உரையாற்றினேன். செவந்தரம்,  பொடைப்பான்,  ஆடுபாரம்,  ஊத்துக்கா ஆகிய சொற்களை கொண்டு இச்சொற்களின் மாந்தர்கள் குறித்து பேசினேன்.  சமீப வட்டார மொழி நாவல்களாக தேரியாயணம்,  சுளுந்தி,  முரம்பு, பங்குடி,  முட்டிக்குறிச்சி,  பிடிமண், அன்னமழகி ஆகிய நாவல்களைக் கோடிட்டு காட்டினேன். நல்ல நிகழ்வு. நல்ல சந்திப்பு. இந்த வாய்ப்பு வெற்றிமொழி பதிப்பகத்தார் திண்டுக்கல் தமிழ்த்தாசன் மூலமாக வாய்த்தது. அவருக்கு இந்நேர...

இந்திய மொழிகள் உற்சவம்

படம்
  இந்திய மொழிகள் உற்சவம் விழாவின் பொருட்டு உள்ளூர் பகுதி எழுத்தாளர்களைச் சிறப்பு விருந்தினராக அழைத்து மாணவர்களுடன் உரையாட தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டது. இதன் பொருட்டு அரியாணிப்பட்டி ஊ.ஒ.ந.நி.பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் தமது பள்ளிக்கு வருகைதந்து மாணவர்களுடன் உரையாட கேட்டுக்கொண்டார். அவரது அன்பின் அழைப்பிற்கு எனது பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் இசைவு தெரிவித்தார். டிசம்பர் 1, அன்று அரியாணிப்பட்டி பள்ளி சென்று அரை மணிநேரம் பாரதி படைப்புகள் குறித்தும் படைப்பிலக்கிய மனநிலை குறித்தும் உரையாற்றினேன். கல்லூரி மாணவர்கள் அளவிற்கு பள்ளி மாணவர்கள் அமைதியாக இருந்து உரையைக் கேட்டு ரசித்தார்கள். நிறைவாக தலைமை ஆசிரியர் அவர்கள் கதராடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். நான் எழுதிய நூல்களில் இரண்டினைப் பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினேன். கல்லூரிகளில் நடைபெறும் இலக்கிய விழாவைப் போல நேர்த்தியான திட்டமிடல், ஒழுங்கு, முறைமை, வரவேற்புரை- சிறப்புரை - நன்றியுரை வரிசையில் விழா சிறப்புடன் நடந்து முடிந்தது. பிறகு நான் பணியாற்றும் முதுகுளம் ஊ.ஒ.ந.நி பள்ளி மாணவர்களிடம் மகாகவி பாரதி எழுதிய கதைகள் குறித்து உர...

கலைஞர் நூற்றாண்டு விழா

படம்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி ஐ.சா. மெர்சி ரம்யா இ.ஆ.ப  தலைமையில் ஆட்சித் தமிழ் கருத்தரங்கம் நடைபெற்றது. இதன் கீழ் "தமிழிலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள்" எனும் தலைப்பில் நானும் கவிஞர் ஜீவி அவர்களும் உரையாற்ற அழைக்கப்பட்டோம். முரசொலி இதழில் மடல் இலக்கியத்தில் "சாக்ரடீஸ் சாகாத சரித்திரம்" எனும் நாடகத்தில் கலைஞர் எழுதிய, "ஏற்றமிகு ஏதென்ஸ் நகரத்து எழில் மிக்க வாலிபர்களே! நாற்றமெடுத்த சமுதாயத்தில் நறுமணம் கமழ்விக்க இதோ சாக்கிரடிஸ் அழைக்கிறேன்! ஓடி வாருங்கள் பச்சை இரத்தம் பாய்ந்தோட கச்சை கட்டி களம் செல்லும் காளையரே! உங்களைத்தான் கூவி அழைக்கின்றேன் கூட்டம் கூட்டமாக சூழ்ந்து வாருங்கள்! வீரம் விலை போகாது. விவேகம் துணைக்கு வராவிட்டால்! தீட்டிய வாழும் தினைவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டி மாத்திரம் போதாது தீரர்களே! இதோ நான் தரும் ஆயுதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! அறிவாயுதம் அறிவாயுதம் இருட்டு மேனியும் குருட்டு மதியும் கொண்ட மடமை பைசாசத்தை ஒரே நொடியில் ஒழித்துக் கட்டும் புதிய போர் கருவி என்கிற தொடக்கப்...