இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்வழிக் கல்வி இயக்கம்

படம்
  செப்டம்பர் 8, கொத்தமங்கலம் தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் நாள் விழாவிற்கு வாழ்த்துரைக்க அழைக்கப்பட்டேன். இந்த விழா அழைப்பிதழில் இடம்பெற்றிருந்த நாள், மடங்கல்(ஆவணி),  மாண்புமிகு, ஆசிரியர் ஆகிய சொற்களின் வேர்ச்சொற்கள் குறித்தும் தமிழின் மேன்மை குறித்தும்  உரையாற்றினேன். இவ்விழாவில் புலவர் பழனி. அரங்கசாமி எழுதிய அகப்பொருள் கூறும் அகவல் நூறு, சங்கத் தமிழ்ச் சாரல் எனும் இரு நூல்கள் வெளியிடப்பட்டன. இந்நூலை சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் அவர்கள் வெளியிட்டு சிறப்பித்தார். பொதுக்கல்வி மேடையின் பொதுச்செயலாளர் திரு. பிரின்சு கசேந்திரபாபு மிகச் சிறப்பான உரையை தந்தார். இந்த வாய்ப்பு நல்கிய தோழர் சிவானந்தம் மேனாள் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாவட்டத் தலைவர் மற்றும் தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் அமைப்பாளர் அ.சி.சின்னப்பத்தமிழர் அவர்களுக்கு எனது நன்றிகள்!!

திசைகள் வழிகாட்டு அமைப்பு -ஐவர் பாராட்டு விழாவில் எனது உரை

படம்
  நண்பர்கள் தோழர்கள் உறவுகள் அனைவருக்கும் வணக்கம், கம்பராமாயணத்தில் கம்பர் ஓரிடத்தில் ' அன்புள இனி நாம் ஓர் ஐவர்கள் உளரானோம் ' என்று பாடியுள்ளார். எனக்கு இந்த வரியிலுள்ள ஓர் என்கிற சுட்டுச்சொல் மீது வியப்பும் சந்தேகமும் வந்தது. அன்புள இனி நாம் ஐவர்கள் உளரானோம் என்று பாடியிருந்தாலும் இதனால் பொருள் மாறிவிடப் போவதில்லை. ஏன் ஓர் என்கிற பதத்தைச் சேர்த்தார் என்று. இதை யாரிடமேனும் கேட்டுத் தெரிந்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. யாரிடம் கேட்பது, கம்பரிடமே கேட்டேன். கம்பர் சொன்னார். ராமன், இலக்குவனன்,  பரதன், சத்துருக்கன் , குகன் என்று ஐவரைக்கொண்டு ஐவர்கள் என்று எழுதினேன். எனக்கும் முன்பு கனகவிசயர் பஞ்சப் பாண்டவர்கள் எனும் ஐவரை பாடியிருக்கிறார். நாட்டுப்புறவியல் ஆய்வாளர் நா. வானமாமலை ஐவர் ராசாக்கள் எனும் கதையை சேகரித்து நூலாக வெளியிட்டுள்ளார். அவரிடம் ஐந்து ராசாக்கள் இருக்கின்றன. வீரமாமுனிவர் எழுதிய பரமாத்மா குரு கதையில் ஐந்து பேரைக் கொண்டு சிறார் கதை எழுதியுள்ளார். இந்த வரிசையில் அறந்தாங்கி திசைகள் அமைப்பு மருத்துவர் தெட்சிணாமூர்த்தி அவர்கள் புதுக்கோட்டை முக்கிய ஐந்து ஆளுமைகளை வைத்து ...