இடுகைகள்

ஆகஸ்ட், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

செங்கொடி - வெளியீட்டு விழாவில் தலைமை உரை

படம்
  அனைவருக்கும் வணக்கம், தஞ்சாவூர், புதுக்கோட்டை எனும் இரு நிலப்பரப்புகளாலும் ஒதுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட கந்தர்வகோட்டை மண்ணிலிருந்து ஒரு பெண் படைப்பாளர் நாவலாசிரியராக பரிமாணம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் மொழியில் ரணம், ஈரம், இரத்தம், கண்ணீர், துக்கம், துயரம், பலி, ஏமாற்றம், எழுச்சி, போராட்டம்,... இத்தனை உணர்வுகளையும் தாங்கி செங்கொடி எனும் நாவல் வெளிவந்திருக்கிறது. மனுசியபுத்திரியும் தேவனும் எனும் புனைபெயரில் எழுதிவரும் முனைவர் ந. சுலோச்சனா அவர்கள் இந்த நாவலை வெளிக்கொணர்ந்திருக்கிறார். தமிழ் எழுத்துலகில் நீண்ட புனைபெயரைக் கொண்டு எழுதிவருகிறவர் இவர்தான். எம்.ஆர். நடராஜன் எனும் பொதுவுடைமை மனிதரின் புத்திரி சுலோச்சனா அவர்கள்  சகாதேவன் எனும் இலக்கிய மனிதரைக் கரம் பிடித்ததன் விளைவாக  மனுசியபுத்திரியும் தேவனும் ஆனார். இதற்கு முன்பு அவர் அன்புள்ள தோழி, அது ஒரு கனாக்காலம், பாலை என்று மூன்று கவிதை தொகுப்புகளைத் தொடர்ந்து இந்த செங்கொடி எனும் நாவலை எழுதியிருக்கிறார். இவர் மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணை பேராசிரியராகவும், த...

நீர், கலப்பை, அகலம், இலக்கியம் - ஆலங்குடி

படம்
 அனைவருக்கும் வணக்கம் ஒப்பாரும் இல்லாத உலகேத்தும் தமிழ் மக்கள் / எப்பாலும் தமக்குரிய வியன்நெறியாம் செயன்முறையில் / தப்பாமல் செய்வனவும் தவிர்வனமும் கடைபிடித்து / முப்பாலின் படியொழுகி முறையோடு வாழும் ஆலங்குடி பகுதி வாழும் மக்கள், இலக்கியச் சுவைஞர், ஆன்றோர் சான்றோர், இவற்றுக்கெல்லாம் மேலாக இந்த நிகழ்வின் பாட்டுடைத் தலைவர்களாக விளங்கும் பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் முதல் மூன்று இடங்கள் பிடித்த ஆலங்குடிப் பகுதி மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ இலக்கிய அமைப்புகள் இருக்கின்றன. மன்றம், பெருமன்றம், சங்கம், சங்கமம், கூடல், அவை, பேரவை, முற்றம், கழகம், சபை. ..இப்படியாக. ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு கொள்கைகொண்டு செயல்பட்டு வருகின்றன. திருமண விழாவோடு காதணி விழாவை சேர்த்து நடத்துவதைப் போல மொய் விருந்தோடு சம்பந்தி விருந்தை சேர்த்து முடிப்பதைப் போல முப்பெரும் விழா, ஐம்பெரும் விழா இப்படியாக விழாக்கள் நடத்தி வருகின்றன. ஆனால் ஆலங்குடி இலக்கியப் பேரவை பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்...