இடுகைகள்

ஜனவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொங்கல் விழா - உரை

படம்
அனைவருக்கும்  வணக்கம், அனைவருக்கும் வணக்கம் என்று  சொல்வதைக் காட்டிலும் அனைத்து மாணவ ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து வைக்கும் சமத்துவப் பொங்கல் நாளில்  எல்லாருக்கும் வணக்கம் என்று சொல்வதே சரியாகவும் பொருத்தமாகவும் இருக்கும். முன்னதாக எல்லாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள், பொங்கல் நல்வாழ்த்துகள்,  உழவர் பெருநாள் வாழ்த்துகள், அய்யன் திருவள்ளுவர் தினம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்ன தலைப்பில் பேசுவதென்று தெரியவில்லை. இளங்கலை கல்வியியல் பயிலும்  மாணவத் தம்பி மனோஜ்கிரன் அவர்கள் எங்கள் கலலூரியில் நடைபெறும் சமத்துவப் பொங்கல் விழாவுக்கு வருகைதந்து சிறப்புரையாற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.  என்னை எந்த வகையில் அழைக்கிறீர்கள் என்று கேட்டேன். இந்தியத் தமிழ் எழுத்தாளராக  அழைக்கிறோம் என்றார். இப்படியான இந்த அழைப்பு என்னை  பெரிதும் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. என்னைப் சில அமைப்புகள் கல்லூரிகள் புதுக்கோட்டை எழுத்தாளராக,  அறிமுக எழுத்தாளராக, புனைவு எழுத்தாளராக அழைத்திருக்கிறார்கள். இந்தியத் தமிழ் எழுத்தாளராக அழைப்பது இதுவே முதன்முற...