இடுகைகள்

செப்டம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நன்றியும் வணக்கமும்

படம்
ஒரு மனிதன் ஒரு நாளில் வணக்கம், நன்றி இவ்விரு சொற்களையும் எத்தனை முறை பயன்படுத்துகிறார், எந்தளவு பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்து அவரது மாண்பு கணக்கிடப்படுகிறது. நான் பள்ளி, கல்லூரி பருவத்தில் வணக்கம் அதிகளவில் உச்சரித்திருக்கிறேன். நன்றியைத் தற்போதுதான் உணர்த்து பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறேன். இதிலிருந்து வணக்கம் என்பது குழந்தை மனம் கொண்டதாகவும் நன்றி என்பது மானுடத் தன்மை கொண்டதாகவும் புரிந்துகொண்டிருக்கிறேன்.  எனக்கு நேர் எதிர் நிலையில் இருக்கிறார் திருவள்ளுவர். இவர் வணக்கத்தை  அதிகம் பயன்படுத்தவில்லை. நன்றியை அதிக அளவு பயன்படுத்தியிருக்கிறார். நன்றி நவில்தல் என்கிற சொல் இவரது பயன்பாட்டின் உச்சம். வணக்கம், நன்றி இரண்டும் பண்புப்பெயர்கள்.  சில இடங்களில் வினைச்சொல்லாவும் வினையாற்றுகிறது.  வணங்குதல் என்பதே வணக்கம் ஆனது. நல்லது என்பதே நன்றும் நன்றியும் ஆனது. நன்றிக்கும் இன்றைய அரசியல் களத்தில் பேசும் பொருளாக இருக்கும் ஆம்புலன்ஸ்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. திருக்குறளில் 108 ஆவது குறள் நன்றியைப் பாடுகிறது. நன்றி மறப்பது நன்றன்று. நிற்க, கடைசியாக நான் முத்த...

அண்ட100 நூல் வெளியீட்டு விழா

படம்
  அன்புகள் - நினைவுகள் - நன்றிகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் , புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மூன்று அமைப்புகளும் இணைந்து நடத்திய அண்டனூர் சுரா சிறுகதைகள் -100 நூல் வெளியீட்டு விழா எதிர்பார்ப்பை விடவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. குறித்த நேரத்திற்கு தொடங்கிவிட்ட விழாவில் தலைமை உரையாற்றிய கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள், "புதுக்கோட்டை இலக்கிய கோட்டை என்றும் புதுக்கோட்டை சிறுகதையாளர்களான அகிலன், புதுகை சஞ்சீவி, சுரேஷ் மான்யா போன்றோர்களின் படைப்புகளைக் குறிப்பிட்டு எனது சிறுகதைகள், பிற படைப்புகள்  குறித்து அவருக்கே உரித்தான அழகு நடையில் உரையாற்றினார். நான் எழுதிய புதுக்கோட்டை வரலாறு,  சொல்லகராதி போன்ற படைப்புகளை உள்ளடங்கி அவரது உரை இருந்தது. இவரைத் தொடர்ந்து கவிஞர் அஜய் குமார் கோஷ்,  மு. சிவானந்தம், மு. கருப்பையா வாழ்த்துரை வழங்கினார்கள். அந்த வாழ்த்துரையில் அஜய் குமார் கோஷ் நான் வாசகர் கடிதத்தில் எழுதத் தொடங்கி சிறுகதை , நாவல் வரை வந்திருப்பதை குறிப்பிட்டு பேசினார். மு. கருப்பையா இலக்கியம் தேவை குறித்தும் மு. சிவானந்தம் எனக்கும் எழு...

ஆர்.சூடாமணி நினைவு சிறுகதை கருத்தரங்கு

படம்
  அனைவருக்கும் வணக்கம் புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியும் வாசகர் பேரவையும் இணைந்து அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்கும் உயர்நோக்கில் சிறுகதை கருத்தரங்கு நடத்திக்கொண்டிருக்கிறது. திருப்பாவையில் ஆண்டாள் " ஏரார்ந்த கண்ணி " என்று அழைக்கப்படுகிறாள். இவ்வாறு அவள் அழைக்கப்பட காரணம் அவளது கண்ணின் அழகு நாளுக்கு நாள் கூடுகிறது. எப்படியென்றால்  மார்கழி மாதத்தில் கண்ணன் எனும் நந்தகோபாலனை ஆண்டாள் தினம் தினம் பார்க்கிறாள். அவனது அழகு நாளுக்கு நாள் கூடுகிறது. அவனது அழகு கூட கூட அவனைப் பார்க்கும் ஆண்டாள் கண்ணின் அழகும் கூடுகிறது. ஒரு பெண்ணின் கண்ணழகு நாளுக்கு நாள் கூடுமா? கதைகளில் கூடும். ஏரார்ந்த என்கிற சொல் கண்ணுக்கு மட்டும்தான் பொருந்துமா? நாவுக்கும் பொருந்தும். ஏரார்ந்த நாவு என்றொரு நாவு இருக்கிறது. அது ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியின் நாவு. அவர் தினம் தினம் பேசுகின்ற மொழியால் கருத்தால் களஞ்சியத்தால் அவரது நாவு ஏரார்ந்த நாவாக வளர்கிறது. ஏரார்ந்த கண், நாவு போல ஏரார்ந்த கைகள் இருக்கின்றன. அது வாசகர் பேரவை செயலாளர் ஓய்வு பெற்ற வரலாற்றுத் துறை பேராசிரியர் ச. விஸ்...