இடுகைகள்

சமகால புனைவுகளின் பொருள்வெளி

படம்
  அனைவருக்கும் வணக்கம், உண்ட மயக்கம் தொண்டனுக்கு மட்டுமல்ல, தோழர்களுக்கும் உண்டு என்பதை நான் அறிவேன். மதிய உணவுக்குப் பிறகு இந்த கூடுகை கூடுகிறது. மதிய உணவுக்குப் பிறகு எல்லாரையும் தூங்க வைக்க வேண்டும் என்பதற்காக சகோதரிகளைப் பாட வைத்தார்கள். அந்தப் பாடலில் தூங்காதவர்களைத் தூங்க வைக்க எழுத்தாளர் மீரான் மைதீன் கதைகள் சொன்னார். இப்பொழுது இந்த அரங்கம் ஆழ்ந்த தூக்கத்திலிருக்கிறது. இந்த தூக்கத்தை எழுப்பும் முகமாக நான் நின்றுகொண்டிருக்கிறேன். கதைக்கும் சிறுகதைக்குமான வித்தியாசம் இதுதான். கதை தூங்கவைப்பதற்காக சொல்லப்படுவது. சிறுகதை தூங்கியவர்களை எழுப்புவதற்காக சொல்லப்படுவது. இந்த நிகழ்வில் முன்னதாக தமிழ்நாடு  கலை இலக்கியப் பெருமன்றம் குமரி மாவட்டக் குழு  கலை இலக்கிய பண்பாட்டு முகாமிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் நடைபெறும் இந்த முகாமில் சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு உரையாற்றும் வாய்ப்பு பெற்றுள்ளேன். இதற்கும் முன்பு மறைந்த கவிஞர் எச்.ஜி.ரசூல் அவர்கள் இந்த முகாமில் பேசும் வாய்ப்பைக் கொடுத்தார். அப்பொழுது 'கண்டுக்கொள்ளப்படாத கதையாளர்கள...

உம்பரான் சிறுகதை நூல் வெளியீட்டு உரை

படம்
  அனைவருக்கும் வணக்கம் , 'எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ' தமிழ்த்தாயை முன்னதாகவே வணங்கிவிடுகிறேன். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் புதுக்கோட்டை மாவட்டக் கிளையின் சார்பில் நடைபெறும் புதுக்கோட்டை மண்ணிலிருந்து  ஒரு புத்தம் புதிய இலக்கிய பயிர் சகோதரி பாண்டிச்செல்வம் எழுதி தையல்  பதிப்பகத்தின் வழியே வெளிவந்திருக்கும் உம்பரான் எனும் சிறுகதை நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் உங்களையும்  அழைத்து வந்திருக்கும்  இதயங்களையும் வணங்குகிறேன். புதுக்கோட்டை இலக்கிய கோட்டையாக திகழ்ந்து வருகிறது. இந்தக் கோட்டைக்குள் கவிதைப் பயிர்கள் அதிகம். சிறுகதை செடிகள்  குறைவு. அதிலும் பெண் சிறுகதையாளர்கள் போதுமான அளவிற்கு  இல்லை என்கிற அளவிலேயே புதுக்கோட்டை  இருந்து வந்துள்ளது. இந்த குறையை போக்கும் விதமாக வந்திருக்கிறார் எழுத்தாளர் பாண்டிச்செல்வம் அவர்கள். பாண்டிச்செல்வம் அவர்கள் தைரியமிக்க பெண். பிரச்சனைகளின் சிக்கல்களை எளிதில் அவிழ்ப்பவர். மனிதர்களை மென்மையாக கையாள்கிறவர். இப்படியான அம்சங்கள் இருக்கிற ஒருவரால்தான் சிறுகதை எழுத முடியும்....

செம்பை மணவாளன் நினைவுச் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு - தலைமை உரை

படம்
  அனைவருக்கும் வணக்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் புதுக்கோட்டை மாவட்டக்குழு முன்னெடுத்திற்கும் தோழர் சந்துரு படத்திறப்பு மற்றும் செம்பை மணவாளன் நினைவு சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவுக்கு  அழைத்து வந்திருக்கின்ற உங்கள் இதயங்களை இரு கரம் கூப்பி வணங்குகிறேன்.  இரு கரங்களில் ஒன்று செயற்பாட்டாளர் சந்துரு என்கிற சந்திரசேகரனுக்கானது. மற்றொரு கரம் எழுத்தாளர் செம்பை மணவாளனுக்கானது. ஒரு நிகழ்வு, ஒரு விழா இரண்டும் ஒரு சேர நடைபெறுகிறது. பெருமன்றத்தின் மேனாள் மாவட்டச் செயலாளர் சந்துரு  அவர்களின் படத்திறப்பு நிகழ்வாகவும் செம்பை மணவாளன் அவர்களின் நினைவாக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவாகவும் நடைபெறுகிறது. நிகழ்வும் விழாவும் ஒரேநேரத்தில் நடத்துவது சரியா என்கிற கேள்வி இங்கு எழலாம். சந்துரு , செம்பை மணவாளன் இருவரும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும்  பொதுவுடைமை இயக்கத்திற்கு வேறு வேறானவர்கள் அல்லர். இருவரும் வேர் ஆனவர்கள். அறிவியலின் இயக்கத்தில் அகவிசை,  புற விசை என்று இரு விசைகள் இருக்கின்றன. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் எனும் பேரம...