சமகால புனைவுகளின் பொருள்வெளி

 அனைவருக்கும் வணக்கம், உண்ட மயக்கம் தொண்டனுக்கு மட்டுமல்ல, தோழர்களுக்கும் உண்டு என்பதை நான் அறிவேன். மதிய உணவுக்குப் பிறகு இந்த கூடுகை கூடுகிறது. மதிய உணவுக்குப் பிறகு எல்லாரையும் தூங்க வைக்க வேண்டும் என்பதற்காக சகோதரிகளைப் பாட வைத்தார்கள். அந்தப் பாடலில் தூங்காதவர்களைத் தூங்க வைக்க எழுத்தாளர் மீரான் மைதீன் கதைகள் சொன்னார். இப்பொழுது இந்த அரங்கம் ஆழ்ந்த தூக்கத்திலிருக்கிறது. இந்த தூக்கத்தை எழுப்பும் முகமாக நான் நின்றுகொண்டிருக்கிறேன். கதைக்கும் சிறுகதைக்குமான வித்தியாசம் இதுதான். கதை தூங்கவைப்பதற்காக சொல்லப்படுவது. சிறுகதை தூங்கியவர்களை எழுப்புவதற்காக சொல்லப்படுவது.

இந்த நிகழ்வில் முன்னதாக தமிழ்நாடு  கலை இலக்கியப் பெருமன்றம் குமரி மாவட்டக் குழு  கலை இலக்கிய பண்பாட்டு முகாமிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் நடைபெறும் இந்த முகாமில் சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு உரையாற்றும் வாய்ப்பு பெற்றுள்ளேன். இதற்கும் முன்பு மறைந்த கவிஞர் எச்.ஜி.ரசூல் அவர்கள் இந்த முகாமில் பேசும் வாய்ப்பைக் கொடுத்தார். அப்பொழுது 'கண்டுக்கொள்ளப்படாத கதையாளர்களின் கதைகள்' எனும் தலைப்பில் உரையாற்றினேன்.  அப்பொழுது எச்.ஜி.ரசூல்,  எனது வழிகாட்டி தோழர் இரா.காமராசு இருவரையும் தவிர என்னை யாருக்கும் தெரியாது. இன்று அமைப்பில்  பலரால் அறியப்பட்ட முகமாக இருக்கிறேன் என்றால் இந்த உறவுகளை நான் சம்பாதித்திருக்கிறேன் என்று சொல்வதைக் காட்டிலும் எழுத்து சம்பாதித்திருக்கிறது என்பதாகவே பார்க்கிறேன்.

இந்த நாட்டை ஆள்வது யார்? கதைகள்தான் ஆள்கிறது. ஓர் அரசன் நாட்டை ஆள வருகையில் அவன் யாருடன் வருகிறான் என்பதை நாம் கவனிக்க வேண்டும். அரசன் தாயுடன் வந்தால் அந்த ஆட்சி தாய்மை பண்புடன்  இருக்கும். அவன் மகாராணியுடன் வலம் வந்தால் அந்த ஆட்சி அதிகாரம் கொண்டதாக  இருக்கும். இளவரசியுடன் வந்தால் அந்த ஆட்சிக் காலத்தில் இளவரசியைப் பேசும் பொருளாக்கி நாட்டுக்குள் எல்லாமும் நடக்கும்.

இந்த நிகழ்வுக்கு நான் வந்தவுடன் கன்னியாகுமரி மாவட்ட எழுத்தாளர் கலைவாணன் அவர்கள்  அவர் சமீபத்தில் எழுதி வெளியிட்ட அவரது சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்தார். தொகுப்பின் பெயர் 'மயிரப்பிடுங்கன கதைகள்'. இந்தத் தொகுப்பை அவர் கொடுத்ததும் பலரும் அதை வாங்கிப் பார்த்தார்கள். சிலர் இதை ஏன் வாங்கினீர்கள். தலைப்பு நன்றாக இல்லையே என்றார்கள். எனது உரையை இந்த தலைப்பிலிருந்தே தொடங்கலாமென இருக்கிறேன்.

இந்தத் தலைப்பிலிருந்து நானொரு கதையை உருவாக்கம் செய்கிறேன். ஓர் அரசன் ஒரு நாட்டை ஆளப் பார்க்கிறான். மக்கள் தன்னையும் தன் ஆட்சியையும் பார்க்கக் கூடாதென்று நினைக்கிறான். அதற்காக அவன் செய்கிறான் அவன் கூடவே வைத்திருக்கும் இளவரசியின் கூந்தல் மயிற்றில் ஒன்றைப் பிடுங்கி மக்களிடம் கொடுத்து,  இந்தக் கூந்தல் மயிற்றின் அழகை நீங்கள் வரையலாம்,  கவிதை எழுதலாம்,  விவாதிக்கலாம், பட்டிமன்றம் நடத்தலாம்,..சிறப்பான படைப்புகளுக்கு பொற்கிழி தரப்படும் என்று அறிவிக்கிறான். மக்கள் கூந்தலில் கவனத்தைக் குவிக்கிறார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு அரசன் எதையெல்லாம் செய்ய வேண்டுமோ, எதையெல்லாம் திணிக்க முடியுமோ அவ்வளவையும் செய்து முடிக்கிறான்.

அப்பொழுது ஒரு சிற்பி என்ன செய்கிறான். அந்த ஒரு கூந்தல் மயிற்றை வைத்து இந்த கூந்தலுக்குரியவள் எப்படி இருக்கிறாளென்று ஒரு சிலை வடிக்கிறான். கூந்தல் என்பது கதை. சிலை என்பது புனைவு. அந்த சிலை இளவரசியைப் போலவே சிலையாகி வருகிறது. அந்த சிலையில் அந்தரங்கமான இடத்தில் ஒரு சின்னதாய் தழும்பை வைத்துவிட்டு வருகிறான்.

மக்களின் கவனம் சிற்பி வடித்த சிலையின் மீதும் சிலை தழும்பு மீதும் செல்கிறது. இளவரசியின் அந்தரங்க தழும்பு இந்த சிற்பிக்கு எப்படி தெரியவந்தது என்று சிற்பி கைது செய்யப்பட்டு சிரச்சேதம் செய்யப்படுகிறான்.

கதைக்கும் சிறுகதைக்குமான வித்தியாசம் இதுதான். கதை ஒரு  கூந்தல் மயிற்றை தேவதை கதையாக, புராண கதையாக, மாயாஜால கதையாக மாற்றும். சிறுகதை அதே கூந்தல் மயிற்றைக்கொண்டு கலகம் செய்யும்.

கதைகள் எப்படி உருவாகின்றன? கதைகள் ஏன் தேவை? நான் யோசித்திருக்கிறேன். கதைகள் மனிதர்களைத் தூங்க வைக்க தேவை. மக்கள் ஏன் தூங்க வேண்டும்? பசியை அமர்த்த உணவு இல்லாத நாட்டில் குழந்தையின் தாகத்தை அமர்த்த பால் இல்லாத நாட்டில் மக்களையும் குழந்தைகளையும் எப்படித் தூங்க வைக்க முடியும்? அதற்குக்  கதைகள் தேவை.

சரி, தூங்கிய மனிதர்களை எப்படி எழுப்புவது? அதற்கு சிறுகதைகள் தேவை.

இந்த மண்ணின் எழுத்தாளர் எச்.ஜி.ரசூல் அவர்கள் அவரது இறுதி காலத்தில் 'போர்ஹேயின் வேதாளம்' எனும் பெயரில் நுண்கதைகளின் தொகுப்பு கொண்டுவந்தார். தோழர் ஹமீம் முஸ்தபா அவரது கீற்று பதிப்பகம் வழியே அந்த தொகுப்பு வெளிவந்தது.

அந்தத் தொகுப்பில் 'மாயப்பென்சில்' என்றொரு சிறுகதை. அந்தக் கதையில் ஒரு குழந்தை ஓர் ஓவியத்தை வரையும். அந்த ஓவியம் உயிர்ப்பெற்று ஏழைகளின் கைக்குச் செல்லும். அந்த குழந்தை வரையும் ஓவியம் பால், ரொட்டி,  அரிசி, கோதுமை, பழங்கள் இப்படியாக இருக்கும். இவையாவும் ஏழைகளின் வசம் செல்லும். இப்பொழுது ஆட்சி செய்துகொண்டிருந்த மன்னனுக்கு ஓவியம் வரையும் குழந்தையின் மீது கோபம்? குழந்தையை கைது செய்து கூண்டில் அடைத்துவிடுவார். குழந்தை சாவி வரையும். அந்தச் சாவி பூட்டைத் திறக்கும். குழந்தை வெளியே வந்துவிடும். அந்த குழந்தையின் புகழ் எங்கும் பரவ அந்தக் குழந்தையை நோக்கி பல மகள்கள், பல மனைவிகள் வந்து அந்தக் குழந்தையிடம் இறந்துபோன தன் தந்தை, கணவரின் புகைப்படத்தைக் கொடுத்து வரையச்சொல்லி கேட்கும். அந்த குழந்தை வரையும் ஓவியங்களாக கல்புருக்கி, கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஷ் இருப்பார்கள்.
இந்தக் கரைதக்குளிலிருக்கும் நுண் அரசியலும் புனைவும் புதிது.
 
சமகால புனைவுகளின் பொருள்வெளி என்பது எனக்குக் கொடுத்திருக்கும் தலைப்பு. புனைவு என்பது என்ன? புனைவு என்பது தற்காலத்திலிருந்து தப்பித்தல். புனைவு என்பதன் காலம் தற்காலம். அப்படியென்றால் கடந்த காலத்தை எழுதுவதற்கு புனைவு தேவையில்லையா? கடந்த காலம் தன்னை வரலாறாக எழுதிக்கொள்ளும். தற்காலத்தை எழுதுவதற்குத்தான் புனைவு தேவை.
 
தமிழில் எழுதப்பட்ட முதல் புனைவாக நான் பார்ப்பது சுப்பிரமணிய பாரதியார் எழுதிய ‘ஆறில் ஒரு பங்கு.’ தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை என்று இதை ஏற்பவர் உண்டு. மறுப்பவர் உண்டு. தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை என்று வ.வே.சு எழுதிய குளத்தங்கரை அரசமரம் என்று பலரும் சொல்கிறார்கள். இருக்கட்டும். தமிழில் எழுதப்பட்ட முதல் புனைவு ஆறில் ஒரு பங்கு.
 
இன்றும் நாம் எழுத  வேண்டிய புனைவு என்ன தெரியுமா? ‘மூன்றாமிடம்’. கேரளத்தில் எம்.டி. வாசுதேவ நாயர் எனும் எழுத்தாளர்   இரண்டாமிடம் என்றோர் நாவல் எழுதியுள்ளார். மகாபாரதக் கதையில் அசாத்தியமான வேலைகள், காரியங்கள் செய்யும் பாத்திரமாக பீமன் இருக்கிறான். இவன்  தர்மன் மற்றும் திரௌபதியின் பார்வையில் அர்ச்சுனனுக்கு அடுத்த இடத்தில் வைத்து மதிக்கப்படுகிறான். நான் ஏன் இரண்டாம்  இடத்தில் மதிக்கப்படுகிறேன் என்று பீமனே கேள்வி கேட்பதுதான் இந்த நாவல்.
 
எனது சமீப கதைக்கு நான் சூட்டும் தலைப்பு ‘மூன்றாமிடம்.’ இந்தத் தலைப்பு என்ன சொல்கிறது என்று உங்களுக்குப் புரிய வேண்டும்? முதல்வதாக பாடப்பட்ட ஒரு பாடல் இப்பொழுது மூன்றாம் இடத்திற்கு நகர்ந்திருக்கிறது. எனக்குரிய இடம் எங்கே என்று அந்தப் பாடலே கேட்பதுதான் ‘மூன்றாமிடம்.’
 
மூன்றாமிடம் எனும் தலைப்பு  இன்றைய ஆளும் அரசை கவனிக்க வைத்துவிடும். அப்படியாகத்தான் பாரதி அன்றைக்கு ‘ஆறில் ஒரு பங்கு’ என்று தலைப்பு வைத்தார். இந்தத் தலைப்பும் இந்த நூலும்  ஆங்கிலேயர்களின் தடை விதிப்புக்கு உள்ளானது.
 
ஆறில் ஒரு பங்கு என்கிற தலைப்பை ஏன் பாரதி வைக்கிறார் என்றால் அன்றைய ஆளும் அரசு மீது அவருக்கு இருந்த அச்சுறுத்தல். பயம் அல்ல, பயம் வேறு. அச்சுறுத்தல் வேறு.
 
ஆறில் ஒரு பங்கு என்பது என்ன? பாரதியாரிடம் கேட்கிறார்கள்? பாரதி சொல்கிறார் : “ஆறில் ஒரு பங்கு என்பது இந்தியாவிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் விகிதம். அவர்கள் பற்றிய கதை இது.” இந்தப் பதிலை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.
 
ஆறில் ஒரு பங்கு என்பது அன்றைய ரஷ்ய நிலப்பரப்பைக் குறிக்கும். உலகில் ஆறில் ஒரு பங்கு நிலம் ரஷ்ய மன்னர் ஜார் மன்னராட்சியின் கீழ் இருந்தது. அத்தகைய ரஷ்யா குட்டியான  ஜப்பான் நாட்டினரிடம் போரிடுகிறது. போரில் ரஷ்யா வெற்றிபெறும் என்றே உலகம் எதிர்பார்த்தது. மாறாக குட்டி நாடான ஜப்பான் வெற்றி பெற்றது.
இதேபோன்று உலகில் சூரியன் மறையாத நாடு என்று அழைக்கப்படும் பிரிட்டிஷ் நாட்டை இந்தியர்களாகிய நாங்கள் தோற்கடிக்கப்போகிறோம் என்று மறைமுகமாக சொல்லும் புனைவுதான்  ஆறில் ஒரு பங்கு.
 
தமிழின் முதல் சிறுகதை என்று குளத்தங்கரை அரசமரம் எனும் கதையை நாம் சொன்னாலும் தமிழின் முதல் புனைவு என்பது ஆறில் ஒரு பங்கு.
 
சமகால புனைவுகளின் பொருள்வெளி – தற்காலத்தில் சிறுகதை எழுத்தாளர்கள் எப்படியாக சிறுகதைகள் எழுதுகிறார்கள் என்று இத்தலைப்பு சொன்னாலும் இத்தலைப்பை நான் அப்படியாக பார்க்கவில்லை. சமகால எழுத்தாளர்கள் எதையெல்லாம் எழுத வேண்டும் என்று சொல்லும் தலைப்பாக ‘சமகால புனைவுகளின் பொருள்வெளி’ எனும் தலைப்பை நான் பார்க்கிறேன்.
 
பதினைந்து வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபர் அரண்மனையைப் பார்த்துவிட்டு  பத்மநாபர் கோயிலுக்குச் சென்றேன். இக்கோவில் குறித்து விளக்கியவர், உலகத்திலேயே பணக்காரக் கோவில் இதுதான் என்றார். இந்தச் செய்தி எனக்கு பெரும் வியப்பைக் கொடுத்தது. கோவிலுக்குள் பல சுரங்கங்கள் இருப்பதாகவும் பல ரகசிய அறைகள் இருப்பதாகவும் அதற்குள் மதிப்பிடமுடியாத நகைகள், அணிகலன்கள் இருப்பதாகவும் சொன்னார். இவ்வளவு நகைகள் எப்படி வந்தன? அவ்வளவும் காணிக்கை என்றார். இது கதை. கதை இந்த வடிவில்தான் இருக்கும். இதை ஏற்க எனது மனம் ஒப்பவில்லை.
 
இப்படியான கதைகள் நம்மைச் சுற்றி நமக்கு சொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தக் கதை ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறது. இந்தக் கதையை நாம் எழுப்ப வேண்டும். கதையை எழுப்பினால் அது சிறுகதையாகிவிடும்.  எப்படி எழுப்பது என்கிற யோசனையில் இருந்தேன்.
 
கன்னியாகுமரி மாவட்ட எழுத்தாளர் நீல. பத்மநாபன் எனும் எழுத்தாளர் பள்ளிகொண்டபுரம் எனும் நாவல் எழுதினார். அதில் சிறுபத்தியளவில் ஒரு செய்தி கிடைத்தது. அதைக் கொண்டு ஒரு புனைவு எழுதினேன். இந்த நாவல் படிக்கப்பட்ட காலத்தில் சென்னை சேலம் இரு நகரங்களுக்கிடையில் எட்டு வழிச் சாலை  போடும் முயற்சிகளும் அதற்கு எதிரான போராட்டங்களும் நடந்துகொண்டிருந்தன.  இதையும் கருத்திக்கொண்டு எனது கதைக்கு ‘எண்வலிச்சாலை’ என்று பெயர் வைத்தேன். இந்தத் தலைப்பு பிழையாகப் பார்க்கப்பட்டது. என்வழிச்சாலை என்று அல்லது என்வலிச்சாலை என்றே கதையின் தலைப்பு இருக்க வேண்டுமென சொன்னார்கள். எண் என்றால் எட்டு. எட்டு வழிச்சாலையால் மக்களுக்கு எழும் வலியே இக்கதை. ஆகவே எண்வலிச்சாலை என்று பெயர்ச் சூட்டினேன்.
 
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மன்னரின் பிறந்த நாள் பெரும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு மாதமாக இருக்கிறது. இந்தக் கொண்டாட்டத்தைக் கொண்டாடுபவர் திவான் அனந்தப்பிள்ளை. ஒரு மாதம் கொண்டாடு கொண்டாடு என்று கொண்டாடிய கொண்டாட்டத்தால் கஜானா காலியாகிவிடுகிறது. பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்ததும் மன்னர் வெளிநாடு சென்று விடுகிறார். அவர் திரும்பி வருவதற்குள் கஜானாவை திவான் நிரப்ப வேண்டும். எப்படி நிரப்புவது என்று யோசிக்கிறார். பல வழிகளில் யோசிக்கிறார். கடைசியாக  அவருக்கொரு யோசனை சொல்லப்படுகிறது.
 
இதன்படி, ‘பத்மநாபர் கோவில், அரண்மனை சுற்றியுள்ள சாலைகளை விரிவுப்படுத்தப்போகிறோம்’ என்று தண்டோரா போடுகிறார்கள். அரண்மனை, கோவில் இருபுறங்களிலுள்ள சாலைகளைச் சங்கிலி கொண்டு அளக்கிறார்கள். அளவை குடியிருப்புகளுக்குள், கடைகளுக்குச் செல்கிறது.
 
குடியிருப்புவாசிகளும் கடை வைத்திருப்பவர்களும் கூடி ஆலோசிக்கிறார்கள். அவர்கள் கழுத்தில் இடுப்பில் காது மூக்கில் இருந்த நகைகளை அறுத்து  திவானுக்குக் கொடுத்து சாலையை விரிவுப்படுத்த வேண்டாம் என்று கெஞ்சுகிறார்கள். திருவிதாங்கூர் கஜானா நிறைந்து வழிகிறது. இந்தச் செய்தியைக் கொண்டு நான் எழுதிய புனைவு ‘எண்வலிச்சாலை.’
 
 இப்படி சமகாலத்தை, சம கால பிரச்சனைகளை எழுதுவதற்கானதே புனைவு.

நமது புனைவுகளின் பொருள்வெளி என்பது ‘தற்காலம்’. இந்தப் பொருண்மையில் நிறைய கதைகள் எழுதுவோம் என்று அனைவருக்கும் வணக்கம்.உண்ட மயக்கம் தொண்டனுக்கு மட்டுமல்ல, தோழர்களுக்கும் உண்டு என்பதை நான் அறிவேன். மதிய உணவுக்குப் பிறகு இந்த கூடுகை கூடுகிறது. மதிய உணவுக்குப் பிறகு எல்லாரையும் தூங்க வைக்க வேண்டும் என்பதற்காக சகோதரிகளைப் பாட வைத்தார்கள். அந்தப் பாடலில் தூங்காதவர்களைத் தூங்க வைக்க எழுத்தாளர் மீரான் மைதீன் கதைகள் சொன்னார். இப்பொழுது இந்த அரங்கம் ஆழ்ந்த தூக்கத்திலிருக்கிறது. இந்த தூக்கத்தை எழுப்பும் முகமாக நான் நின்றுகொண்டிருக்கிறேன். கதைக்கும் சிறுகதைக்குமான வித்தியாசம் இதுதான். கதை தூங்கவைப்பதற்காக சொல்லப்படுவது. சிறுகதை தூங்கியவர்களை எழுப்புவதற்காக எழுதப்படுகிறது.

இந்த நிகழ்வில் முன்னதாக தமிழ்நாடு  கலை இலக்கியப் பெருமன்றம் குமரி மாவட்டக் குழு  கலை இலக்கிய பண்பாட்டு முகாமிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் நடைபெறும் இந்த முகாமில் சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு உரையாற்றும் வாய்ப்பு பெற்றுள்ளேன். இதற்கும் முன்பு மறைந்த கவிஞர் எச்.ஜி.ரசூல் அவர்கள் இந்த முகாமில் பேசும் வாய்ப்பைக் கொடுத்தார். அப்பொழுது 'கண்டுக்கொள்ளப்படாத கதையாளர்களின் கதைகள்' எனும் தலைப்பில் உரையாற்றினேன்.  அப்பொழுது எச்.ஜி.ரசூல்,  எனது வழிகாட்டி தோழர் இரா.காமராசு இருவரையும் தவிர என்னை யாருக்கும் தெரியாது. இன்று அமைப்பில்  பலரால் அறியப்பட்ட முகமாக இருக்கிறேன் என்றால் இந்த உறவுகளை நான் சம்பாதித்திருக்கிறேன் என்று சொல்வதைக் காட்டிலும் எழுத்து சம்பாதித்திருக்கிறது என்பதாகவே பார்க்கிறேன்.

இந்த நாட்டை ஆள்வது யார்? கதைகள்தான் ஆள்கிறது. ஓர் அரசன் நாட்டை ஆள வருகையில் அவன் யாருடன் வருகிறான் என்பதை நாம் கவனிக்க வேண்டும். அரசன் தாயுடன் வந்தால் அந்த ஆட்சி தாய்மை பண்புடன்  இருக்கும். அவன் மகாராணியுடன் வலம் வந்தால் அந்த ஆட்சி அதிகாரம் கொண்டதாக  இருக்கும். இளவரசியுடன் வந்தால் அந்த ஆட்சிக் காலத்தில் இளவரசியைப் பேசும் பொருளாக்கி நாட்டுக்குள் எல்லாமும் நடக்கும்.

இந்த நிகழ்வுக்கு நான் வந்தவுடன் கன்னியாகுமரி மாவட்ட எழுத்தாளர் கலைவாணன் அவர்கள்  அவர் சமீபத்தில் எழுதி வெளியிட்ட அவரது சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்தார். தொகுப்பின் பெயர் 'மயிரப்பிடுங்கன கதைகள்'. இந்தத் தொகுப்பை அவர் கொடுத்ததும் பலரும் அதை வாங்கிப் பார்த்தார்கள். சிலர் இதை ஏன் வாங்கினீர்கள். தலைப்பு நன்றாக இல்லையே என்றார்கள். எனது உரையை இந்த தலைப்பிலிருந்தே தொடங்கலாமென இருக்கிறேன்.

இந்தத் தலைப்பிலிருந்து நானொரு கதையை உருவாக்கம் செய்கிறேன். ஓர் அரசன் ஒரு நாட்டை ஆளப் பார்க்கிறான். மக்கள் தன்னையும் தன் ஆட்சியையும் பார்க்கக் கூடாதென்று நினைக்கிறான். அதற்காக அவன் செய்கிறான் அவன் கூடவே வைத்திருக்கும் இளவரசியின் கூந்தல் மயிற்றில் ஒன்றைப் பிடுங்கி மக்களிடம் கொடுத்து,  இந்தக் கூந்தல் மயிற்றின் அழகை நீங்கள் வரையலாம்,  கவிதை எழுதலாம்,  விவாதிக்கலாம், பட்டிமன்றம் நடத்தலாம்,..சிறப்பான படைப்புகளுக்கு பொற்கிழி தரப்படும் என்று அறிவிக்கிறான். மக்கள் கூந்தலில் கவனத்தைக் குவிக்கிறார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு அரசன் எதையெல்லாம் செய்ய வேண்டுமோ, எதையெல்லாம் திணிக்க முடியுமோ அவ்வளவையும் செய்து முடிக்கிறான்.

அப்பொழுது ஒரு சிற்பி என்ன செய்கிறான். அந்த ஒரு கூந்தல் மயிற்றை வைத்து இந்த கூந்தலுக்குரியவள் எப்படி இருக்கிறாளென்று ஒரு சிலை வடிக்கிறான். கூந்தல் என்பது கதை. சிலை என்பது புனைவு. அந்த சிலை இளவரசியைப் போலவே சிலையாகி வருகிறது. அந்த சிலையில் அந்தரங்கமான இடத்தில் ஒரு சின்னதாய் தழும்பை வைத்துவிட்டு வருகிறான்.

மக்களின் கவனம் சிற்பி வடித்த சிலையின் மீதும் சிலை தழும்பு மீதும் செல்கிறது. இளவரசியின் அந்தரங்க தழும்பு இந்த சிற்பிக்கு எப்படி தெரியவந்தது என்று சிற்பி கைது செய்யப்பட்டு சிரச்சேதம் செய்யப்படுகிறான்.

கதைக்கும் சிறுகதைக்குமான வித்தியாசம் இதுதான். கதை ஒரு  கூந்தல் மயிற்றை தேவதை கதையாக, புராண கதையாக, மாயாஜால கதையாக மாற்றும். சிறுகதை அதே கூந்தல் மயிற்றைக்கொண்டு கலகம் செய்யும்.

கதைகள் எப்படி உருவாகின்றன? கதைகள் ஏன் தேவை? நான் யோசித்திருக்கிறேன். கதைகள் மனிதர்களைத் தூங்க வைக்க தேவை. மக்கள் ஏன் தூங்க வேண்டும்? பசியை அமர்த்த உணவு இல்லாத நாட்டில் குழந்தையின் தாகத்தை அமர்த்த பால் இல்லாத நாட்டில் மக்களையும் குழந்தைகளையும் எப்படித் தூங்க வைக்க முடியும்? அதற்குக்  கதைகள் தேவை.

சரி, தூங்கிய மனிதர்களை எப்படி எழுப்புவது? அதற்கு சிறுகதைகள் தேவை.

இந்த மண்ணின் எழுத்தாளர் எச்.ஜி.ரசூல் அவர்கள் அவரது இறுதி காலத்தில் 'போர்ஹேயின் வேதாளம்' எனும் பெயரில் நுண்கதைகளின் தொகுப்பு கொண்டுவந்தார். தோழர் ஹமீம் முஸ்தபா அவரது கீற்று பதிப்பகம் வழியே அந்த தொகுப்பு வெளிவந்தது.

அந்தத் தொகுப்பில் 'மாயப்பென்சில்' என்றொரு சிறுகதை. அந்தக் கதையில் ஒரு குழந்தை ஓர் ஓவியத்தை வரையும். அந்த ஓவியம் உயிர்ப்பெற்று ஏழைகளின் கைக்குச் செல்லும். அந்த குழந்தை வரையும் ஓவியம் பால், ரொட்டி,  அரிசி, கோதுமை, பழங்கள் இப்படியாக இருக்கும். இவையாவும் ஏழைகளின் வசம் செல்லும். இப்பொழுது ஆட்சி செய்துகொண்டிருந்த மன்னனுக்கு ஓவியம் வரையும் குழந்தையின் மீது கோபம்? குழந்தையை கைது செய்து கூண்டில் அடைத்துவிடுவார். குழந்தை சாவி வரையும். அந்தச் சாவி பூட்டைத் திறக்கும். குழந்தை வெளியே வந்துவிடும். அந்த குழந்தையின் புகழ் எங்கும் பரவ அந்தக் குழந்தையை நோக்கி பல மகள்கள், பல மனைவிகள் வந்து அந்தக் குழந்தையிடம் இறந்துபோன தன் தந்தை, கணவரின் புகைப்படத்தைக் கொடுத்து வரையச்சொல்லி கேட்கும். அந்த குழந்தை வரையும் ஓவியங்களாக கல்புருக்கி, கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஷ் இருப்பார்கள். 
இந்தக் கதைக்குளிலிருக்கும் நுண் அரசியலும் புனைவும் புதிது. 
 
சமகால புனைவுகளின் பொருள்வெளி என்பது எனக்குக் கொடுத்திருக்கும் தலைப்பு. புனைவு என்பது என்ன? புனைவு என்பது தற்காலத்திலிருந்து தப்பித்தல். புனைவு என்பதன் காலம் தற்காலம். அப்படியென்றால் கடந்த காலத்தை எழுதுவதற்கு புனைவு தேவையில்லையா? கடந்த காலம் தன்னை வரலாறாக எழுதிக்கொள்ளும். தற்காலத்தை எழுதுவதற்குத்தான் புனைவு தேவை. 
 
தமிழில் எழுதப்பட்ட முதல் புனைவாக நான் பார்ப்பது சுப்பிரமணிய பாரதியார் எழுதிய ‘ஆறில் ஒரு பங்கு.’ தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை என்று இதை ஏற்பவர் உண்டு. மறுப்பவர் உண்டு. தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை என்று வ.வே.சு எழுதிய குளத்தங்கரை அரசமரம் என்று பலரும் சொல்கிறார்கள். இருக்கட்டும். தமிழில் எழுதப்பட்ட முதல் புனைவு ஆறில் ஒரு பங்கு. 
 
இன்றும் நாம் எழுத  வேண்டிய புனைவு என்ன தெரியுமா? ‘மூன்றாமிடம்’. கேரளத்தில் எம்.டி. வாசுதேவ நாயர் எனும் எழுத்தாளர்   இரண்டாமிடம் என்றோர் நாவல் எழுதியுள்ளார். மகாபாரதக் கதையில் அசாத்தியமான வேலைகள், காரியங்கள் செய்யும் பாத்திரமாக பீமன் இருக்கிறான். இவன்  தர்மன் மற்றும் திரௌபதியின் பார்வையில் அர்ச்சுனனுக்கு அடுத்த இடத்தில் வைத்து மதிக்கப்படுகிறான். நான் ஏன் இரண்டாம்  இடத்தில் மதிக்கப்படுகிறேன் என்று பீமனே கேள்வி கேட்பதுதான் இந்த நாவல். 
 
எனது சமீப கதைக்கு நான் சூட்டும் தலைப்பு ‘மூன்றாமிடம்.’ இந்தத் தலைப்பு என்ன சொல்கிறது என்று உங்களுக்குப் புரிய வேண்டும்? முதல்வதாக பாடப்பட்ட ஒரு பாடல் இப்பொழுது மூன்றாம் இடத்திற்கு நகர்ந்திருக்கிறது. எனக்குரிய இடம் எங்கே என்று அந்தப் பாடலே கேட்பதுதான் ‘மூன்றாமிடம்.’ 
 
மூன்றாமிடம் எனும் தலைப்பு  இன்றைய ஆளும் அரசை கவனிக்க வைத்துவிடும். அப்படியாகத்தான் பாரதி அன்றைக்கு ‘ஆறில் ஒரு பங்கு’ என்று தலைப்பு வைத்தார். இந்தத் தலைப்பும் இந்த நூலும்  ஆங்கிலேயர்களின் தடை விதிப்புக்கு உள்ளானது. 
 
ஆறில் ஒரு பங்கு என்கிற தலைப்பை ஏன் பாரதி வைக்கிறார் என்றால் அன்றைய ஆளும் அரசு மீது அவருக்கு இருந்த அச்சுறுத்தல். பயம் அல்ல, பயம் வேறு. அச்சுறுத்தல் வேறு. 
 
ஆறில் ஒரு பங்கு என்பது என்ன? பாரதியாரிடம் கேட்கிறார்கள்? பாரதி சொல்கிறார் : “ஆறில் ஒரு பங்கு என்பது இந்தியாவிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் விகிதம். அவர்கள் பற்றிய கதை இது.” இந்தப் பதிலை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள். 
 
ஆறில் ஒரு பங்கு என்பது அன்றைய ரஷ்ய நிலப்பரப்பைக் குறிக்கும். உலகில் ஆறில் ஒரு பங்கு நிலம் ரஷ்ய மன்னர் ஜார் மன்னராட்சியின் கீழ் இருந்தது. அத்தகைய ரஷ்யா குட்டியான  ஜப்பான் நாட்டினரிடம் போரிடுகிறது. போரில் ரஷ்யா வெற்றிபெறும் என்றே உலகம் எதிர்பார்த்தது. மாறாக குட்டி நாடான ஜப்பான் வெற்றி பெற்றது. 
இதேபோன்று உலகில் சூரியன் மறையாத நாடு என்று அழைக்கப்படும் பிரிட்டிஷ் நாட்டை இந்தியர்களாகிய நாங்கள் தோற்கடிக்கப்போகிறோம் என்று மறைமுகமாக சொல்லும் புனைவுதான்  ஆறில் ஒரு பங்கு. 
 
தமிழின் முதல் சிறுகதை என்று குளத்தங்கரை அரசமரம் எனும் கதையை நாம் சொன்னாலும் தமிழின் முதல் புனைவு என்பது ஆறில் ஒரு பங்கு. 
 
சமகால புனைவுகளின் பொருள்வெளி – தற்காலத்தில் சிறுகதை எழுத்தாளர்கள் எப்படியாக சிறுகதைகள் எழுதுகிறார்கள் என்று இத்தலைப்பு சொன்னாலும் இத்தலைப்பை நான் அப்படியாக பார்க்கவில்லை. சமகால எழுத்தாளர்கள் எதையெல்லாம் எழுத வேண்டும் என்று சொல்லும் தலைப்பாக ‘சமகால புனைவுகளின் பொருள்வெளி’ எனும் தலைப்பை நான் பார்க்கிறேன். 
 
பதினைந்து வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபர் அரண்மனையைப் பார்த்துவிட்டு  பத்மநாபர் கோயிலுக்குச் சென்றேன். இக்கோவில் குறித்து விளக்கியவர், உலகத்திலேயே பணக்காரக் கோவில் இதுதான் என்றார். இந்தச் செய்தி எனக்கு பெரும் வியப்பைக் கொடுத்தது. கோவிலுக்குள் பல சுரங்கங்கள் இருப்பதாகவும் பல ரகசிய அறைகள் இருப்பதாகவும் அதற்குள் மதிப்பிடமுடியாத நகைகள், அணிகலன்கள் இருப்பதாகவும் சொன்னார். இவ்வளவு நகைகள் எப்படி வந்தன? அவ்வளவும் காணிக்கை என்றார். இது கதை. கதை இந்த வடிவில்தான் இருக்கும். இதை ஏற்க எனது மனம் ஒப்பவில்லை. 
 
இப்படியான கதைகள் நம்மைச் சுற்றி நமக்கு சொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தக் கதை ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறது. இந்தக் கதையை நாம் எழுப்ப வேண்டும். கதையை எழுப்பினால் அது சிறுகதையாகிவிடும்.  எப்படி எழுப்பது என்கிற யோசனையில் இருந்தேன். 
 
கன்னியாகுமரி மாவட்ட எழுத்தாளர் நீல. பத்மநாபன் எனும் எழுத்தாளர் பள்ளிகொண்டபுரம் எனும் நாவல் எழுதினார். அதில் சிறுபத்தியளவில் ஒரு செய்தி கிடைத்தது. அதைக் கொண்டு ஒரு புனைவு எழுதினேன். இந்த நாவல் படிக்கப்பட்ட காலத்தில் சென்னை சேலம் இரு நகரங்களுக்கிடையில் எட்டு வழிச் சாலை  போடும் முயற்சிகளும் அதற்கு எதிரான போராட்டங்களும் நடந்துகொண்டிருந்தன.  இதையும் கருத்தில்கொண்டு எனது கதைக்கு ‘எண்வலிச்சாலை’ என்று பெயர் வைத்தேன். இந்தத் தலைப்பு பிழையாகப் பார்க்கப்பட்டது. என்வழிச்சாலை என்று அல்லது என்வலிச்சாலை என்றே கதையின் தலைப்பு இருக்க வேண்டுமென சொன்னார்கள். எண் என்றால் எட்டு. எட்டு வழிச்சாலையால் மக்களுக்கு எழும் வலியே இக்கதை. ஆகவே எண்வலிச்சாலை என்று பெயர்ச் சூட்டினேன்.
 
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மன்னரின் பிறந்த நாள் பெரும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு மாதமாக இருக்கிறது. இந்தக் கொண்டாட்டத்தைக் கொண்டாடுபவர் திவான் அனந்தப்பிள்ளை. ஒரு மாதம் கொண்டாடு கொண்டாடு என்று கொண்டாடிய கொண்டாட்டத்தால் கஜானா காலியாகிவிடுகிறது. பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்ததும் மன்னர் வெளிநாடு சென்று விடுகிறார். அவர் திரும்பி வருவதற்குள் கஜானாவை திவான் நிரப்ப வேண்டும். எப்படி நிரப்புவது என்று யோசிக்கிறார். பல வழிகளில் யோசிக்கிறார். கடைசியாக  அவருக்கொரு யோசனை சொல்லப்படுகிறது. 
 
இதன்படி, ‘பத்மநாபர் கோவில், அரண்மனை சுற்றியுள்ள சாலைகளை விரிவுப்படுத்தப்போகிறோம்’ என்று தண்டோரா போடுகிறார்கள். அரண்மனை, கோவில் இருபுறங்களிலுள்ள சாலைகளைச் சங்கிலி கொண்டு அளக்கிறார்கள். அளவை குடியிருப்புகளுக்குள், கடைகளுக்குச் செல்கிறது. 
 
குடியிருப்புவாசிகளும் கடை வைத்திருப்பவர்களும் கூடி ஆலோசிக்கிறார்கள். அவர்கள் கழுத்தில் இடுப்பில் காது மூக்கில் இருந்த நகைகளை அறுத்து  திவானுக்குக் கொடுத்து சாலையை விரிவுப்படுத்த வேண்டாம் என்று கெஞ்சுகிறார்கள். திருவிதாங்கூர் கஜானா நிறைந்து வழிகிறது. இந்தச் செய்தியைக் கொண்டு நான் எழுதிய புனைவு ‘எண்வலிச்சாலை.’
 
 இப்படி சமகாலத்தை, சம கால பிரச்சனைகளை எழுதுவதற்கானதே புனைவு.

 நமது புனைவுகளின் பொருள்வெளி என்பது ‘தற்காலம்’. இந்தப் பொருண்மையில் நிறைய கதைகள் எழுதுவோம் என்று கூறி வாய்ப்புக்கு நன்றி பாராட்டி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம். 
 
(தமிழ்நாடு  கலை இலக்கியப் பெருமன்றம், கன்னியாகுமரி கிளை சார்பில் மே 23,24  - 2026 இரு நாட்கள் நடைபெற்ற  கலை இலக்கியப் பண்பாட்டு முகாமில் ‘சமகாலப் புனைவுகளின் பொருள்வெளி’ எனும் தலைப்பில் ஆற்றிய உரை)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எழுதுதல் என்பது சரியாக சிந்தித்தல்

இலக்கிய உரை - எழுத்தாளருக்கு மூன்று படித்துறைகள்

நீர், கலப்பை, அகலம், இலக்கியம் - ஆலங்குடி