இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பலருடன் மருத்துவர் ராமதாஸ், விடுதலைக்குமரன், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

படம்
 

சௌமா விருது

படம்
தடுக்கை எனும் சிறுகதைத் தொகுப்பிற்காக  

சௌமா புகைப்படங்கள்

படம்
 

புதுக்கோட்டைக்குப் பெயர் சூட்டியது யார்?

படம்
பு துக்கோட்டைக்குப் புதுக்கோட்டை என்று யார் பெயர்ச் சூட்டியிருப்பார்? மன்னரா, மக்களா? இல்லை, அதுவாகவே அந்தப் பெயரை சூட்டிக்கொண்டதா? புதிய கோட்டை எனப் பொருள்படும் இக்கோட்டையில் இதற்கும் முன்பு பழைய கோட்டைகள் இருந்தனவா? இருந்திருந்தால் எத்தனை கோட்டைகள் இருந்தன, போன்ற கேள்விகளிலிருந்துதான் புதுக்கோட்டைக்கான பெயர்க் காரணத்தைக் நாம் கண்டடைய முடியும். கோட்டை என்றால் கோட்டைகள்தானா?. கோட்டை என்பதற்குப் பல பொருள்கள் நம்மிடம் உண்டு. வானத்தில் ஒரு திசையில் திரளும் மேகத்திற்குக் கோட்டை என்று பெயர். "வானம் கோட்டக் கட்டுது. மழை வெளுத்து வாங்கப்போவுது"   என்பதான சொல்லாடல் இன்றைக்கும் உண்டு. சிலம்பாட்டத்தில் ஒருவர் பல சிலம்புகளின் தாக்குதலை எதிர்கொண்டு மறித்துக்கட்டுவதற்கு கோட்டை என்றே பெயர். பெரிய மரங்களைக் கொண்ட காட்டிற்குக் கோட்டை என்று பெயர். வீட்டின் உட்கூடு கோட்டை. இருபத்தொரு மரக்கால்கள் கொண்ட அளவையின் அலகு கோட்டை. நில அளவையாகவும் கோட்டை இருக்கிறது. ஓர் அரண்மனை எழுப்பி அத்துடன் தேர், யானை, படைகள் சுற்றிவரவும், அவற்றை நிறுத்தவும் தேவையான நிலத்திற்குக் கோட்டை என்று பெயர். வைக்கோல்போர...