தமிழ்வழிக் கல்வி இயக்கம்
செப்டம்பர் 8, கொத்தமங்கலம் தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் நாள் விழாவிற்கு வாழ்த்துரைக்க அழைக்கப்பட்டேன். இந்த விழா அழைப்பிதழில் இடம்பெற்றிருந்த நாள், மடங்கல்(ஆவணி), மாண்புமிகு, ஆசிரியர் ஆகிய சொற்களின் வேர்ச்சொற்கள் குறித்தும் தமிழின் மேன்மை குறித்தும் உரையாற்றினேன். இவ்விழாவில் புலவர் பழனி. அரங்கசாமி எழுதிய அகப்பொருள் கூறும் அகவல் நூறு, சங்கத் தமிழ்ச் சாரல் எனும் இரு நூல்கள் வெளியிடப்பட்டன. இந்நூலை சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் அவர்கள் வெளியிட்டு சிறப்பித்தார். பொதுக்கல்வி மேடையின் பொதுச்செயலாளர் திரு. பிரின்சு கசேந்திரபாபு மிகச் சிறப்பான உரையை
தந்தார். இந்த வாய்ப்பு நல்கிய தோழர் சிவானந்தம் மேனாள் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாவட்டத் தலைவர் மற்றும் தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் அமைப்பாளர் அ.சி.சின்னப்பத்தமிழர் அவர்களுக்கு எனது நன்றிகள்!!




.jpg)

கருத்துகள்
கருத்துரையிடுக