காரைக்கால் இலக்கிய சந்திப்பும் புது அனுபவமும்
காரைக்கால் இலக்கிய சந்திப்பும் புது அனுபவமும்
சிங்கப்பூர் எழுத்தாளர் சிங்கை அழகிரிசாமி சக்திவேல் அவர்கள் காரைக்கால் கடற்கரையில் கலங்கரை விளக்கத்தையொட்டிய அசோக் ரெஸ்டாரெண்ட் அரங்கில் காரைக்கால் இலக்கிய சந்திப்பு எனும் பெயரில் ஒரு நிகழ்வைக் கூட்டியிருந்தார். இரண்டு நாள். நிகழ்வு. முதல் நாளில் எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா, நான், வெற்றிமொழி பதிப்பகத்தார் திண்டுக்கல் தாஸ் மூவரும் படைப்பிலக்கியம் சார்ந்தும் தோழர் செல்லச்சாமி அவர்கள் கட்சி அரசியலின் போக்கு குறித்து பேசும் அமர்வாக இருந்தது. நான் 'இலக்கியத்தில் வட்டார மொழி மாந்தர்கள்' எனும் தலைப்பில் உரையாற்றினேன்.
செவந்தரம், பொடைப்பான், ஆடுபாரம், ஊத்துக்கா ஆகிய சொற்களை கொண்டு இச்சொற்களின் மாந்தர்கள் குறித்து பேசினேன்.
சமீப வட்டார மொழி நாவல்களாக தேரியாயணம், சுளுந்தி, முரம்பு, பங்குடி, முட்டிக்குறிச்சி, பிடிமண், அன்னமழகி ஆகிய நாவல்களைக் கோடிட்டு காட்டினேன்.
நல்ல நிகழ்வு. நல்ல சந்திப்பு. இந்த வாய்ப்பு வெற்றிமொழி பதிப்பகத்தார் திண்டுக்கல் தமிழ்த்தாசன் மூலமாக வாய்த்தது. அவருக்கு இந்நேரத்தில் நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்.













.jpg)

கருத்துகள்
கருத்துரையிடுக