மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி உரை

 மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் இடம்பெற்றுள்ள மாட்சிமை என்கிற பதம் எந்த இலக்கியத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது?


உலக தாய்மொழிகள் தினத்தின் வரலாறு என்ன?

உலகில் எந்தெந்த மொழிகள் எந்தெந்த மொழிகளால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றன?

உலகில் தொன்மை மொழி, செம்மொழி என்று மொழிகள் இருக்கின்றன. உயர்ந்த மொழியென்றும் சிறந்த மொழியென்றும் ஒரு மொழி இருக்கிறதா?

புதுக்கோட்டை மொழிக்கு ஆற்றிய பங்களிப்புகள் என்ன? தமிழிலக்கியங்கள் எவையெல்லாம் புதுக்கோட்டை நிலப் பகுதியைப் பாடியுள்ளன?

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிய குறிப்பிடத்தகுந்த  தமிழ்ப் பேராசியர்கள் யாரெல்லாம், அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்புகள் என்ன?

தமிழ்த்துறை- தமிழாய்வுத்துறை இரண்டில் எதிர்கால தேவை எது?

இத்தகைய கேள்விகளை உள்ளடக்கி 'என்றும் வாழும் தமிழ்' எனும் தலைப்பில் புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் ஒரு மணி நேரம்  உரையாற்றினேன்.

தலைவர் கல்லூரி முதல்வர் அம்மா திருமதி பேரா. புவனேஸ்வரி அவர்கள்

நோக்கவுரை தமிழாய்வுத் துறை தலைவர் திரு. பேரா. சி.சேதுராமன் அவர்கள்

நெறியாளிகை திரு. பேரா. ஸ்ரீதர் அவர்கள்

மாணவச் சகோதரர், சகோதரிகள் ஆழ்ந்து உரையை கேட்டதைக்கொண்டு பார்க்கையில் வருங்காலங்களில் தமிழ் மேலும்  செழித்தோங்கும் என்று நம்பிக்கை  பிறந்துள்ளது.


















கருத்துகள்

பிரபலமான இடுகைகள்