திமுகவும் எனது முதல் நூலும்!!
திமுக இளைஞரணி சார்பில் கந்தர்வகோட்டையில் ஒரு நூலகம் திறக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 16 அன்று திறக்கப்பட்ட இந்நூலகம் இன்றுதான் (22.05.2024) எனக்குத் தெரியவந்தது. சின்ன நூலகம், ஆபூர்வ நூல்கள். பேரறிஞர் அண்ணா, கலைஞர், பெரியார், அண்ணல் அம்பேத்கர் மொத்த தொகுப்பு நூல்கள் கொண்ட நூலகம். நான் எழுதிய இரண்டு நூல்கள்கூட அதில் இடம்பெற்றிருந்தன. சொல்லேர், தடக்கை.
எனது எழுத்துப் பயணத் தொடர்ச்சியில் திமுகவுக்கு சிறுபங்கு இருக்கிறது. இது நடந்தது ஏப்ரல் 1, 2014. முட்டாள் தினத்தை முன்னிட்டு தினமணி இதழில் 'முட்டாள்களின் கீழ் உலகம்' என்றொரு கட்டுரை எழுதினேன். அக்கட்டுரை இதழில் ஒரு பக்கம் முழுமையும் பிரசுரமாகியிருந்தது. கட்டுரையின் கீழே கந்தர்வகோட்டை முகவரி கொடுக்கப்பட்டிருந்தது.
தஞ்சாவூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எஸ்.எஸ். பழனிமாணிக்கம் அவர்கள் டெல்லியில் இருந்தபடி இக்கட்டுரையை வாசித்து யாரிடமோ எனது அலைபேசி எண்ணைக் கேட்டுவாங்கி என்னைத் தொடர்புகொண்டார்.டெல்லியிலிருந்து பேசுவதாகச் சொல்லி கட்டுரைக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். நானும் கந்தர்வகோட்டைதான் என்றார். நான் ஆனந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துபோனேன்.
எனது பணி, எழுத்து என்று விசாரித்து நீங்கள் எந்த அமைப்பின்கீழும் இயங்குகிறீர்களா என்று கேட்டார். "ஆம், நான் இடதுசாரி இலக்கிய அமைப்புகளில் இயங்குகிறேன்" என்றேன். அப்படியா! பாராட்டினார். இடதுசாரி, திராவிட இயக்கம் இரண்டு அமைப்புக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. ஆயினும் நீங்கள் பெரியாரை வாசிக்க வேண்டும், அண்ணாவை வாசிக்க வேண்டும் என்றார்.
"அண்ணா கொஞ்சம் வாசித்திருக்கிறேன். மாஜிக் கடவுள்கள், வேலைக்காரி, ஓர் இரவு,... " பாராட்டினார்.
ஜூன் மாதம் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூர் திமுக கிளையின் சார்பில் கருத்தரங்கம் நடத்துகிறோம். கருத்தரங்குக்கு ஒரு கட்டுரை தர இயலுமாக எனக் கேட்டார். நான் தருவதாக ஒப்புக்கொண்டேன். 'சமூக வளர்ச்சியில் திராவிட இதழ்களின் பங்கு' என்று தலைப்புக் கொடுத்தார். மிக நீண்ட கட்டுரையாக எழுதி அனுப்பினேன். கருத்தரங்குக்கு அழைப்பிதழ் அனுப்பி அழைப்புவிடுத்தார். பெரிய விழா. என்னை மேடையேற்றி பாராட்டினார். பொன்னாடை அணிவித்து பொற்கிழி வழங்கினார். வீட்டில் வந்து திறந்து பார்த்தேன். நல்ல தொகை இருந்தது. அன்றைய எனது பொருளாதார நிலையில் பெரிய தொகையும்கூட!
அந்தத் தொகையைக் கொண்டு என்னால் நகை வாங்கியிருக்க முடியும். ஒரு கடனை அடைத்திருக்க முடியும். ஆனால் நான் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து எனது முதல் நூலைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினேன். அதற்காக மொத்த தொகையையும் செலவழித்தேன். நூல் வெளிவந்தது, " மழைக்குப் பிறகான பொழுது."
முதல் நூலுக்குக் கிடைத்த வரவேற்பில் தொடர்ச்சயாக எழுதி இருபது நூல்கள் வெளியிட்டுள்ளேன். 2021 ஆம் ஆண்டு இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் திருக்கரங்களால் விருதும் பெற்றேன்.
இந்நேரத்தில் பெருந்தகை திரு. எஸ். எஸ். பழனிமாணிக்கம் அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது படைப்புகளை அவர் எங்கேயேனும் இதழ்களில் வாசித்தால் என்னை அலைபேசியில் அழைத்து பாராட்டுவார். ஒரு முறை என்னிடம் " உங்களுக்கு நான் எதாவது உதவி செய்ய விரும்புகிறேன். எதாவது கேளுங்கள்" என்றார். நான் " பேரறிஞர் அண்ணாவின் நாடாளுமன்ற உரைகள் மொத்தமும் வேண்டும்" என்றேன். " ஆம், வாங்கித் தருகிறேன்..." என்றார். அதன்பிறகு நான் அவரிடம் தொடர்புகொள்ளத் தயங்கி பேசுவதை நிறுத்திக்கொண்டேன். ஆயினும் பேரறிஞர் அண்ணாவின் நாடாளுமன்ற உரைகள் வாசிக்க வேண்டும் என்கிற தாகம் என்னுள் இருந்துகொண்டிருந்தது.
இன்று கந்தர்வகோட்டை திமுக இளைஞரணி திறந்திருக்கும் கலைஞர் நூலகத்திற்குச் சென்றேன். அறை முழுவதும் நூல்களாக இருந்தன.
பேரறிஞர் அண்ணாவின் மொத்த படைப்புகள், நாடாளுமன்ற உரைகள், சிறுகதை, கவிதை ,கட்டுரை, தலையங்கக் கட்டுரைகள் என 110 தொகுதிகள் இருந்தன. அண்ணா வாழ்ந்தது ஐம்பத்து எட்டு ஆண்டுகள். இந்த வயதுக்குள் எப்படி இவர் இவ்வளவு நூல்கள் எழுதினார். நினைக்கவே கண்ணைக் கட்டியது. மொத்த நூல்களும் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. முதல் நூலை எடுத்து விரித்தேன்.
அண்ணா அறிவுக்கொடை- 1.
தலைப்பு - காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி. 8.5.1955 அன்று தம்பிகளுக்கு எழுதிய மடல்.
திராவிட கழகத்தின் இரண்டாவது மாநாடு திருச்சி நகரில் நடக்கவிருக்க அதற்கு நிதி தருவாய் தம்பி என்று எழுதிய மடல் கட்டுரை. அக்கட்டுரையிலிருந்த முத்தான வரிகளை குறிப்பெடுத்தேன்.
தனி மனிதர்களை விட அமைப்பு முக்கியம்.
அணிவகுத்து நின்று நாம் நம் கடமையைச் செய்ய வேண்டும்.
சில்லறைத் தகராறுகளைச் சிரித்து விரட்டுங்கள்.
பெரிய இலட்சியத்திற்காகப் பாடுபடுவோம்,,, இப்படியான வரிகளில் பேசுவதைப் போன்ற எழுத்தோடை கட்டுரை.
பிறகு ஒவ்வொரு நூலாக எடுத்து பிரித்துப் பார்த்தேன். எல்லா நூல்களிலும் அண்ணாவின் இந்த வாசகம் இடம் பெற்றிருந்தது. அண்ணா அவருக்கே உரித்தான கவித்துவத்தில் சொல்லிய வரிகள் இவை.
Go to the People,
Live among them,
Learn from them,
Serve them,
Plan with them,
Start with what they know,
Build with what they have....
தம்பி !
மக்களிடம் செல்
மக்களோடு வாழ்
மக்களிடமிருந்து கற்றுக்கொள்
மக்களை நேசி .
அவர்களுக்கு என்ன தெரியுமோ
அவற்றிலிருந்து தொடங்கு!
அவர்களிடம் என்ன இருக்கிறதோ
அவற்றைக் கொண்டு உருவாக்கு!
- அறிஞர் அண்ணா.
கந்தர்வகோட்டையில் ஓர் அரசு கிளை நூலகம் இருக்கிறது. ஆயினும் இன்னுமோர் அறிவுக்கொடை- அறிவுக்கடல் திறக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலகத்தை நான் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். அதற்காக திமுக இளைஞரணி கந்தர்வகோட்டை கிளைக்கு எனது வாழ்த்துகள், நன்றிகள்.
பெரிய இலட்சியத்திற்காகப் பாடுபடுவோம்,,, இப்படியான வரிகளில் பேசுவதைப் போன்ற எழுத்தோடை கட்டுரை.
பிறகு ஒவ்வொரு நூலாக எடுத்து பிரித்துப் பார்த்தேன். எல்லா நூல்களிலும் அண்ணாவின் இந்த வாசகம் இடம் பெற்றிருந்தது. அண்ணா அவருக்கே உரித்தான கவித்துவத்தில் சொல்லிய வரிகள் இவை.
Go to the People,
Live among them,
Learn from them,
Serve them,
Plan with them,
Start with what they know,
Build with what they have....
தம்பி !
மக்களிடம் செல்
மக்களோடு வாழ்
மக்களிடமிருந்து கற்றுக்கொள்
மக்களை நேசி .
அவர்களுக்கு என்ன தெரியுமோ
அவற்றிலிருந்து தொடங்கு!
அவர்களிடம் என்ன இருக்கிறதோ
அவற்றைக் கொண்டு உருவாக்கு!
- அறிஞர் அண்ணா.
கந்தர்வகோட்டையில் ஓர் அரசு கிளை நூலகம் இருக்கிறது. ஆயினும் இன்னுமோர் அறிவுக்கொடை- அறிவுக்கடல் திறக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலகத்தை நான் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். அதற்காக திமுக இளைஞரணி கந்தர்வகோட்டை கிளைக்கு எனது வாழ்த்துகள், நன்றிகள்.





.jpg)

சிறப்பு தோழர் ❤️
பதிலளிநீக்கு