இதயா மகளிர் கல்லூரி நிகழ்வு

07.08.2024 அன்று கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் தமிழ் நாவல்களும் நுட்பங்களும் எனும் தலைப்பில் உரையாற்றினேன். இந்த உரையில் கல்கி எழுதிய காந்திமதியின் காதல் என்கிற நாவலை முதன்மையாக எடுத்து அதிலிருக்கின்ற நுட்பங்கள், திருப்பங்கள் குறித்து விளக்கினேன். சமகால நாவல்களில் எம்.எம்.தீன் எழுதிய நீர்ப்பரணி,  ஜீவிதன் எழுதிய பிடிமண்,  சோலச்சி எழுதிய முட்டிக்குறிச்சி,  க.மூர்த்தி எழுதிய பங்குடி நாவல்களின் நுட்பங்கள் குறித்தும் நான் எழுதிய அன்னமழகி நாவலுக்கான கரு முளைவிட்ட தருணத்தையும் பகிர்ந்துகொண்டேன்.

இக்கல்லூரியின் தமிழ்த்துறையும் வண்டல் இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய பயிற்சிப் பட்டறை இது. எனக்கு முன்னதாக தற்கால கவிதைகள் எனும் தலைப்பில் வண்டல் இலக்கிய அமைப்பின் நிறுவனர் செறுகுடி செந்தில் அவர்களும் சிறுகதைகளும் சிறுகதையாளர்களும் எனும் தலைப்பில் குடந்தை தாழ்வாரம் அமைப்பின் நிறுவனரும் எழுத்தாளருமான கு.இலக்கியன் அவர்களும் உரையாற்றினார்கள்.  இந்நிகழ்வில் மௌவல் பதிப்பகத்தார் வலங்கைமான் நூருதீன், ஆடலரசன், நூலாசிரியன் உள்ளிட்ட பலரையும் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல நிகழ்வு,,,,மகிழ்ச்சியும் பாராட்டுகளும்,,,,






 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்